டெல்லி: பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷ்னல் வங்கி, தனது வங்கியின் 400 நாணயமற்ற கணக்காளர் மற்றும் வராக்கடன் கணக்கில் உள்ள 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது. இதற்கான பரிந்துரையை ரிசர்வ் வங்கியிடம் பிஎன்பி சமர்ப்பித்துள்ளது.

மேலும் இவ்வங்கியின் 400 நாணயமற்ற கணக்காளர்களின் விபரங்களைப் பஞ்சாப் நேஷ்னல் வங்கி, ஆர்பிஐ-க்கு அளிக்கப்பட்டுள்ளது, இவர்களின் விபரங்களை விரைவில் ஆர்பிஐ இணையத் தளத்தில் வெளியிடப்படும் என இவ்வங்கியின் நிர்வாகத் தலைவர் கெளரி சங்கர் தெரிவித்தார்.
தற்போது இவ்வங்கி கடன் திட்டத்தை மறுசீரமைக்கும் பணியில் இறங்கியுள்ளது.
இதில் ஒரு பகுதியாக இவ்வங்கி கணக்கில் உள்ள 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான வராக்கடன் சொத்துக்களை விற்கத் திட்டமிட்டுள்ளது.
2015ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இவ்வங்கியின் லாப அளவு சுமார் 48.68 சதவீதம் குறைந்துள்ளதாகப் பிஎன்பி வங்கி தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications