மும்பை: வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு ஓரே நாளில் 400 புள்ளிகள் வரை உயர்ந்து சந்தை உயர்வுடன் முடிவடைந்தது.
கடந்த ஒரு வாரமாக இந்திய நிறுவனங்கள் தங்களது காலாண்டு முடிவுகளை வெளியிட்டு வருகிறது, இவை முதலீட்டாளர்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் அதிகளிவில் முதலீடு செய்துள்ளனர்.
மேலும் இந்திய சந்தையில் வங்கிகளின் காலாண்டு முடிவுகள் சந்தையை வேகமாக உயர்த்தியது. இதுமட்டும் அல்லாமல் மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளில் 70,000 கோடி ரூபாய் வரை நிதி உட்செலுத்த திட்டமிட்டுள்ளது இதன் காரணமாக இன்று வங்கிப்பங்குகள் இன்று அதிகளவில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 409.21 புள்ளிகள் உயர்ந்து 28,114.56 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது. அதேபோல் நிஃப்டி குறியீடும் 111.05 புள்ளிகள் வரை உயர்ந்து 8,532.85 புள்ளிகளை எட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications
