ஒரு வாரச் சரிவை ஓரே நாளில் ஈடு செய்த தங்கம் விலை!
சென்னை: கடந்த ஒரு வாரமாகத் தங்கம் மற்றும் வெள்ளி மீதான முதலீடு அதிகளவில் குறைந்ததால், இதன் விலை தொடர் சரிவைச் சந்தித்து வந்தது.
ஆனால் வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று புல்லியன் சந்தையில் திடீரென முதலீடு அதிகரித்தால், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மதிய நேர வர்த்தகத்தில் உயரத் துவங்கியது.

வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 24 கேரட் தங்கத்தின் விலை கிராமிற்கு 17 ரூபாய் உயர்ந்து 2,511 ரூபாயாகவும், 22 கேரட் தங்கம் கிராமிற்கு 16 ரூபாய் அதிகரித்து 2,360 ரூபாயாகவும் உள்ளது.
மேலும் இன்றைய வர்த்தகத்தில் 1 கிலோ பார் வெள்ளியின் விலை 385 ரூபாய் உயர்ந்து 34,015 ரூபாயாக உள்ளது.
நாணய பரிமாற்றத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.83 ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications