இப்பொழுது தங்கத்தில் முதலீடு செய்வது சரியா? தவறா?

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: கடந்த நான்கு நாட்களாகத் தங்கம் விலை தொடர் சரிவைச் சந்தித்து 10 கிராம் தங்கம் 25,000 என்ற அளவில் இருந்து இறங்கியுள்ளது.

 

இன்றைய வர்த்தகத்தில் 24 கேரட் தங்கத்தின் விலை கிராமிற்கு 17 ரூபாய் உயர்ந்து 2,511 ரூபாயாக உள்ளது. இதேபோல் 22 கேரட் தங்கம் கிராமிற்கு 16 ரூபாய் அதிகரித்து 2,360 ரூபாயாக உள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் அடுத்தச் சில வாரங்களில் திருமணம் மற்றும் விழக்காலம் துவங்குவதால் தங்கம் விலை அதிகளவில் உயர வாய்ப்புகள் உள்ளது. இந்த சூழ்நிலையில் தங்கத்தை வாங்குவதும், அதன் மீது முதலீடு செய்வதும் சரியா?

(ஒரு வாரச் சரிவை ஓரே நாளில் ஈடு செய்த தங்கம் விலை!)

என்ன காரணம்??

என்ன காரணம்??

அமெரிக்கப் பெடரல் வங்கி வருகிற செப்டம்பர் மாதம், தனது கடன் பத்திரங்களின் மீதான வட்டி விகிதத்தை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.

இதன் காரணமாக முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை அமெரிக்கச் சந்தை மீது திருப்ப திட்டமிட்டுள்ளனர். எனவே சர்வதேச சந்தையிலும் தங்கம் மற்றும் வெள்ளி மீதான முதலீடு குறைந்துள்ளது.

அமெரிக்கப் பத்திரம்

அமெரிக்கப் பத்திரம்

பொதுவாகக் கடன் பத்திர முதலீட்டில் நிலையான மற்றும் உறுதியான லாபம் கிடைக்கும். இந்நிலையில் அமெரிக்க அரசு தனது கடன் பத்திரங்கள் மீதான வட்டியை உயர்த்தும்போது அனைவரின் கண்களும் பத்திரங்கள் மீது திரும்பியுள்ளது.

இந்திய சந்தையில் என்ன நிலவரம்?

இந்திய சந்தையில் என்ன நிலவரம்?

அடுத்தச் சில மாதங்களுக்கு இந்தியாவில் திருமணம் மற்றும் விழாக்காலம் நெருங்கியுள்ள நிலையில், தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் குறைந்தாலும் உள்நாட்டுச் சந்தையில் விலையில் நிலைப்பாடு ஏற்படும்.

இப்போ தங்கத்தில் முதலீடு செய்யலாமா?
 

இப்போ தங்கத்தில் முதலீடு செய்யலாமா?

நீண்ட கால நோக்கில் தங்கத்தில் முதலீடு செய்தால் சரி. குறுகிய காலத்தில் தங்கத்தின் மீதான முதலீட்டில் நீங்கள் லாபத்தை எதிர்பார்க்க முடியாது. அதுவும் இத்தகைய சூழ்நிலையில் தங்கம் மற்றும் வெள்ளி போன்றவற்றில் முதலீடு செய்ய வேண்டும்.

இந்நிலை சந்தை நிலவரத்தைப் பொறுத்து திடீரென மாறவும் வாய்ப்புகள் உள்ளது.

வட்டி வருமானம்

வட்டி வருமானம்

மேலும் தற்போதைய நிலையில் தங்கத்தின் மீதான முதலீட்டில் அதிக லாபம் இல்லாத காரணத்தால், முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டைக் அதிக வட்டி வருமானம் கிடைக்கும் முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்ய துவங்கியுள்ளனர்.

சரி கச்சா எண்ணெய் என்ன நிலவரம்??

சரி கச்சா எண்ணெய் என்ன நிலவரம்??

சவுதி, அமெரிக்கா, ரஷ்யா ஆகிய அனைத்து முக்கிய நாடுகளும் தங்களின் எண்ணெய் உற்பத்தி அளவை குறைக்காமல் உள்ளதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 50 டாலருக்கும் குறைவாக.

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரத்தை தெரிந்துக்கொள்ள இதை கிளிக் செய்யவும்.

சமுக வளைதள இணைப்புகள்

சமுக வளைதள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold at 4-yr low, short wedding season unlikely to lift prices

Gold prices fell for a fourth consecutive day Thursday to a four-year low of Rs 24,980 per 10 gm in the Indian bullion market, breaching the psychologically important mark Rs 25,000 just as we are about to enter the festival and wedding season.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X