அமெரிக்கப் பர்கர் நிறுவனத்தில் யுவராஜ் சிங் முதலீடு!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியில் முக்கிய வீரர்களில் ஒருவரான யுவராஜ் சிங், தனது முதலீட்டு நிறுவனத்தின் மூலம் அமெரிக்கப் பர்கர் நிறுவன பங்குகளைக் கைப்பற்றியுள்ளார்.

 

இந்த வார இறுதியில், இந்தியாவில் தனது முதல் கிளையைத் துவங்க உள்ள அமெரிக்கப் பர்கர் நிறுவனமான கார்ல்ஸ் ஜூனியர் நிறுவனத்தில் யுவராஜ் சிங் குறிப்பிடப்படாத தொகையை முதலீடு செய்துள்ளார்.

கார்ல்ஸ் ஜூனியர்

கார்ல்ஸ் ஜூனியர்

இந்திய அமெரிக்க நிறுவனத்தின் மாஸ்டர் பிரான்சாய்ஸ் நிறுவனமான சைபிஸ்-பிரைட்-ஸ்டார் நிறுவனத்தின் பங்குகளில் யுவிகேன் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் இந்நிறுவனத்தில் யுவராஜ் முக்கியப் பங்குதாரராக இணைந்துள்ளார்.

பிராண்டு அம்பாசிடர்

பிராண்டு அம்பாசிடர்

அமெரிக்காவில் கார்ல்ஸ் ஜூனியர் நிறுவனத்தின் ஆஸ்தான பிராண்டு அம்பாசிடர்களான பாரிஸ் ஹில்டன், கிம் கர்தாஷியன் மற்றும் பத்மா லக்ஷமி ஆகியோர் பட்டியலில் தற்போது யுவராஜ் சிங் இடம்பிடித்துள்ளார்.

இந்திய கிளைான சைபிஸ்-பிரைட்-ஸ்டார் நிறுவனத்தின் பிராண்டு அம்பாசிடராகவும் யுவராஜ் சிங் நியமிக்கப்பட்டு உள்ளார்.

ஜெட் செட் கோ..

ஜெட் செட் கோ..

சில நாட்களுக்கு முன்னர் யுவராஜ்-இன் யுவிகேன் நிறுவனம் ஆன்லைன் ஜெட் மற்றும் ஹெலிக்காப்ட் விற்பனை தளமான ஜெட்செட்கோ நிறுவனத்தில் முதலீடு செய்தார்.

சைபிஸ் கார்ப்
 

சைபிஸ் கார்ப்

கார்ல்ஸ் ஜூனியர் நிறுவனத்தின் இந்திய விரிவாக்கத்திற்கான மொத்த உரிமையும் பெற்ற சைபிஸ் கார்ப் நிறுவனம் கடந்த வாரம் 12.5 கோடி ரூபாய் நிதியைத் திரட்டியது.

சாம் சோப்ரா

சாம் சோப்ரா

இதுகுறித்துச் சைபிஸ் கார்ப் நிறுவனத்தின் தலைவர் சாம் சோப்ரா கூறுகையில், அடுத்த 10 வருடத்தில் இந்தியாவில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட நகரங்களில் சுமார் 100 கடைகளைத் திறக்க உள்ளதாக அறிவித்தார். மேலும் அடுத்த 2 வருடத்தில் 200 கோடி ரூபாய் வரை நிதித் திரட்டவும் சைபிஸ் கார்ப் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

ஜட்டி முதல் கார் வரை

ஜட்டி முதல் கார் வரை

ஜட்டி முதல் கார் வரை காசு பாத்துட்டோம்.. அடுத்தது என்ன?

4 வருட வீழ்ச்சியில் தங்கம் விலை

4 வருட வீழ்ச்சியில் தங்கம் விலை

நான்கு நாள் தொடர் வீழ்ச்சி... 4 ஆண்டுகள் காணாத சரிவை எட்டிய தங்கம் விலை!

சமுக வளைதள இணைப்புகள்

சமுக வளைதள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Yuvraj Singh invests in US burger chain

Cricketer Yuvraj Singh has now set his eyes on juicy burgers. Singh's company YouWeCan Ventures has invested in American burger chain Carl's Jr that is set to open its first store in India this weekend.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X