"கிரிக்கெட் வேண்டாம் படிப்பு தான் முக்கியம்"!!! என்று சொல்லும் பெற்றோர்களே இத படிங்க ப்ளீஸ்...

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இங்கிலாந்து நாட்டில் குளிர் காலத்தின் போது செம்மறியாடு மேய்ந்த தோட்டத்தில் கட்டையை பேட்டாகவும், செம்மறியாடின் கம்பளியை பந்தாகவும் கொண்டு விளையாட துவங்கியது தான் இந்த கிரிக்கெட். பின் வரும் காலங்களில் சிறிது சிறிதாக உருமாறி இப்பொது பிற விளையாட்டை மேலாதிக்கம் செய்கிறது கிரிக்கெட் (வருந்த வேண்டிய விஷயம்).

 

இதற்கு உதாரணம் நமது தேசிய விளையாட்டு என்ற அளவில் போற்றப்படும் ஹாக்கி-யின் தற்போதிய நிலை என்வென்றால் விளையாட்டு போட்டிகள் எப்போழுது நடக்கிறது, இந்தியா யாருடன் எதிர்கொள்கிறது என்ற விஷயங்கள் பெருவாரியான மக்களுக்கு தெரியவில்லை. இதற்கு காரணம் இந்த கிரிக்கெட் தான்.

பொதுவாக இந்தியா மக்கள் விளையாட்டுகளில் ஆர்வம் காட்டுவது குறைவுதான் (படிப்பு தான் நமக்கு முக்கியம் என்ன சிரி தானே பெற்றோர்களே), அதிலும் கிரிக்கெட் தவிர மற்ற விளையாட்டுகளில் ஆர்வம் காட்டுவது மிகவும் குறைவு. அப்படி ஆர்வம் காட்டி இருந்தால் இந்தியா அனைத்து விளையாட்டுகளிலும் சிறப்பாக இருக்கும் (ஒலிம்பிக்கில் கடைசி இடத்தில் இருப்பதற்கு அது தான் காரணமோ??)

சரி கிரிக்கெட் பார்கிறோம், விளையாடுறோம், ஆனால் நமது பிள்ளைகளை எத்தனை பெற்றோர்கள் கிரிக்கெட் விளையாட்டை விளையாட ஊக்குவிக்கிறோம்?. அனைத்து துறைகளும் சிறந்தது தான், அதிலும் வெற்றி, தோல்வி என்று எல்லாம் உள்ளது. இதற்கு எடுத்து காட்டு தான் பிரகாஷ் ராஜ்-இன் தோனி என்ற திரைப்படம்.

இந்திய அணியில் விளையாட ஒவ்வொரு ஆண்டும் சிறந்த விரர்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தேர்ந்தெடுக்கும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் அந்த ஆண்டு முழுவதும் விளையாடுவார்கள். அவர்களின் சம்பளம் எவ்வளவு என்று யாருக்காவது தெரியுமா பாஸ். முதுகலை பட்டம் பெற்றவர்களை விட அதிகமான சம்பளம், சொகுசு வாழ்க்கை இவர்களுக்கு உண்டு. யார் யார்க்கு எவ்வளவு சம்பளம் என்று பார்ப்போமா...

கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்

கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2013 ஆம் ஆண்டுக்கான அதன் மத்திய விளையாட்டு வீரர்கள் ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது. ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்கள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்: க்ரூப் ஏ, க்ரூப் பி மற்றும் க்ரூப் சி.

37 வீரர்கள் மட்டும் தான்

37 வீரர்கள் மட்டும் தான்

இந்திய கிரிக்கெட் வாரியம் இந்தியாவின் தலைசிறந்த வீரர்கள் 37 பேருக்கு, இந்த ஒப்பந்தங்களை வழங்கி கௌரவித்துள்ளது.

க்ருப்-ஏ,பி,சி

க்ருப்-ஏ,பி,சி

இவர்களுள் ஒன்பது பேர் க்ரேட் ஏ-விலும் (வருடத்துக்கு 1 கோடி ரூபாய், அதாவது சுமார் 186,000 டாலர்கள்), எட்டுப் பேர் க்ரேட் பி-யிலும் (வருடத்துக்கு 50 லட்ச ரூபாய், அதாவது சுமார் 93,000 டாலர்கள்) மற்றும் இருபது பேர் க்ரேட் சி-ஒப்பந்தங்களிலும் (வருடத்துக்கு 50 லட்ச ரூபாய், அதாவது சுமார் 93,000 டாலர்கள்) இடம்பிடித்துள்ளார்கள்.

கிரேடு ஏ
 

கிரேடு ஏ

கிரேடு ஏ: ரீடெய்னர்ஷிப் கட்டணம் - வருடத்துக்கு 1 கோடி ரூபாய். கிரேடு ஏ-வில் இடம்பிடித்துள்ள வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி, ஜாகீர் கான், வீரேந்தர் சேவாக், கௌதம் காம்பீர், சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், விராத் கோலி, ஆர் அஷ்வின்

கிரேடு பி

கிரேடு பி

கிரேடு பி: ரீடெய்னர்ஷிப் கட்டணம் - வருடத்துக்கு 50 லட்ச ரூபாய். கிரேடு பி-யில் இடம்பிடித்துள்ள வீரர்கள்: ஹர்பஜன் சிங், இஷாந்த் ஷர்மா, ப்ரக்யான் ஓஜா, ரோஹித் ஷர்மா, செடேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே, இர்ஃபான் பதான், உமேஷ் யாதவ்

கிரேடு சி

கிரேடு சி

கிரேடு சி: ரீடெய்னர்ஷிப் கட்டணம் - வருடத்துக்கு 25 லட்ச ரூபாய். கிரேடு சி-யில் இடம்பிடித்துள்ள வீரர்கள்: ரவீந்திர ஜடேஜா, அமித் மிஷ்ரா, வினய் குமார், முனாஃப் படேல், அபிமன்யு மிதுன், எம்.விஜய், ஷிகார் தவான், ரித்திமான் சஹா, பார்த்திவ் படேல், மனோஜ் திவாரி, எஸ்.பத்ரிநாத், பியூஷ் சாவ்லா, தினேஷ் கார்த்திக், ராகுல் ஷர்மா, வருண் ஆரோன், அபினவ் முகுந்த், அஷோக் தின்டா, யூசுஃப் பதான், ப்ரவீண் குமார், எல்.பாலாஜி.

கூடுதல் சம்பளம்

கூடுதல் சம்பளம்

அணியின் 11 ஆட்டக்காரர்களாக களமிறங்கும் வீரர்கள் அனைவரும் கூடுதல் கட்டணத்தைப் பெறுவர்,டெஸ்ட் போட்டியில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு வீரர்களுக்கும் தலா 7 லட்ச ரூபாய், அதேபோல் சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கு தலா 4 லட்ச ரூபாய், சர்வதேச ட்வென்டி20 போட்டிகளுக்கு தலா 2 லட்ச ரூபாய்

இது மட்டும் இல்லைகோ

இது மட்டும் இல்லைகோ

இவர்களுக்கான தங்கும் வசதி, உணவு, போக்குவரத்து, அதர செலவுகள் (பார்ட்டி, பப்பு, மது, இன்னும் பல) அனைத்தும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடையது.

அட முக்கியாமான ஒன்று

அட முக்கியாமான ஒன்று

விளம்பரம்!!!. மக்கள் விளம்பரம் செய்தால் எதை வேண்டும் ஆனாலும் வாங்குவார்கள் என்ற எண்ணம் எல்லா பெரு நிறுவனங்களிடம் உள்ள ஒரு பொதுவான கருத்து. இப்பொழுது சோப்பு, சீப்பு, கண்ணாடி, என எல்லா விளம்பரங்களிலும் கிரிக்கெட் வீரர்கள் தான்.

சில வீரர்கள் (தோனி இல்லைங்கோ!!!)

சில வீரர்கள் (தோனி இல்லைங்கோ!!!)

சில கிரிக்கெட் விரர்கள் கிரிக்கெட் விளையாடுவதை ஒரு பக்கம் செய்தாலும், விளம்பரத்தில் நடப்பது முக்கிய வேலையாக வைத்து இருக்கிறார்கள். இவர்களின் சம்பளத்தை விட விளம்பரங்களில் நடப்பதன் மூலம் பன்மடங்கு அதிகமாக பணம் கிடைக்கிறது. (தோனி, கோலி....) இவர்களை குறை கூறவில்லை இது இவர்களின் திறமைக்கு கிடைத்த பரிசு.

பெற்றோர்களுக்கு ஒரு அட்வைஸ்

பெற்றோர்களுக்கு ஒரு அட்வைஸ்

இனிமேலாவது பிள்ளைகளின் விருப்பத்திற்கேற்ப அவர்களின் வாழ்க்கையை விடிவமைக்க இடம் கொடுங்கள். கண்டிப்பாக உயர்ந்த நிலையை அடைவர்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian Cricketer's Salary 2013

In the last 10 years cricket in India has evolved so much and its the players who benefited the most with his salaries, match fees and performence bonuses, and its not a surprise that players Like Mahindra Singh Dhoni and Sachine Tendulkar finds themselves in the top sport richlist of Forbes for last couple of years.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X