அசிம் பிரேம்ஜி உள்ள பட்டியலில் ஷிவ் நாடார் மட்டுமே உள்ளார்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: உலகின் முன்னணி பத்திரிக்கைகளில் ஒன்றான போர்ப்ஸ் நிறுவனம் நிறுவனங்கள் மற்றும் அதனைச் சார்ந்த ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

 

இந்நிலையில் போர்ப்ஸ் நிறுவனம் டெக்னாலஜி உலகில் டாப் 100 பணக்காரர்களைப் பட்டியலிட்டுள்ளது. இதில் டாப் 20 இடங்களில் இந்தியாவில் இருந்து அசிம் பிரேம்ஜி மற்றும் ஷிவ் நாடார் ஆகியோர் மட்டுமே இடம்பிடித்துள்ளனர்.

டாப் 20

டாப் 20

இந்நிறுவனத்தின் ஆய்வு முடிவில் டாப் 20 பேர் கொண்ட பட்டியலில் இந்தியாவில் இருந்து விப்ரோ நிறுவன தலைவர் அசிம் பிரேம்ஜி, எச்சிஎல் நிறுவன தலைவர் ஷிவ் நாடார் ஆகியோர் மட்டுமே இடம்பிடித்துள்ளனர்.

இந்தியர்கள்

இந்தியர்கள்

100 பேர் கொண்ட இப்பட்டியலில், அசிம் பிரேம்ஜி 13 வது இடமும், ஷிவ் நாடார் 14வது இடத்தையும் பிடித்துள்ளார். இது தவிர இந்தியர்களான ரோமேஷ் வத்வானி மற்றும் பார்த் தேசாய் ஆகியோர் இடம் படித்துள்ளனர்.

அசிம் பிரேம்ஜி

அசிம் பிரேம்ஜி

70 வயதாகும் அசிம் பிரேம்ஜி விப்ரோ நிறுவனத்தின் தலைவராக உள்ளார். ஆசிய தொழில்நுட்ப சந்தையில் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ள பிரேம்ஜியின் மொத்த மதிப்பு 17.45 பில்லியன் டாலர்.

ஷிவ் நாடார்
 

ஷிவ் நாடார்

இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாகக் கருதப்படும் எச்சிஎல் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் ஷிவ் நாடார் அவர்கள் 14.4 பில்லியன் டாலர் மதிப்புடன் பேர்ப்ஸ் நிறுவன பட்டியலில் 14வது இடத்தில் உள்ளார்.

பில் கேட்ஸ்

பில் கேட்ஸ்

போர்ப்ஸ் நிறுவனம் பட்டியலிட்டுள்ள 100 பேர் கொண்ட இப்பட்டியலில் வழக்கம் போல் பில்கேட்ஸ் 79.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

லேரி எலிசன்

லேரி எலிசன்

ஆரக்கிள் நிறுவனத்தின் தலைவரான லேரி எலிசன் 50 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஜெப் பிசோஸ்

ஜெப் பிசோஸ்

அமேசான்.காம் நிறுவனத்தின் தலைவரான ஜெப் பிசோஸ் இப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார்.

டாப் 5

டாப் 5

முதல் மூன்று இடங்களைப் பில் கேட்ஸ், லேரி எலிசன், ஜெப் பிசோஸ் பெற்றுள்ள நிலையில் டாப் 5 இடங்களில் மார்க் ஜூக்கர்பெர்க் (பேஸ்புக்), லேரி பேஜ் (கூகுள்), ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.

சமுக வளைதள இணைப்புகள்

சமுக வளைதள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Premji, Nadar among Forbes' 20 richest people in tech

Wipro Chairman Azim Premji and HCL founder Shiv Nadar are the only two Indian tycoons in the top 20 richest people in the world of technology, according to an inaugural list by Forbes, topped by Microsoft co-founder Bill Gates.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X