மும்பை: இந்திய சந்தையில் மிகப்பெரிய பொது வங்கியாக விளங்கும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஜுன் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் 10.25 சதவீத லாப உயர்வுடன் 3,692 கோடி ரூபாய் பெற்றுள்ளது.
கடந்த நிதியாண்டில் இதன் அளவு 3,349 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இக்காலகட்டத்தில் இவ்வங்கியின் மொத்த வருவாய் அளவு 36,487 கோடி ரூபாயில் இருந்து 39,643 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அதாவது கடந்த ஆண்டின் இதே காலாண்டை ஒப்பிடுகையில் இவ்வங்கியின் வருவாய் அளவு 8.6 சதவீதம் உயர்ந்துள்ளது.
இவ்வங்கியின் சேவைக்கான கட்டணத்தின் மூலம் 3,202 கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ளது, கடந்த ஆண்டை விடவும் இதன் அளவு 12.9 சதவீதம் அதிகம்.
இக்காலகட்டத்தில் சில்லறை வர்த்தகம் மற்றும் விவசாயத் துறையில் வங்கியின் வர்த்தகம் குறைந்துள்ளதாக எஸ்பிஐ வங்கித் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்தார்.
சமுக வளைதள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.


Click it and Unblock the Notifications