தங்கம் விலை கிராமிற்கு 8 ரூபாய் உயர்வு.. வெள்ளி ரூ.35,000 தாண்டியது...

சென்னை: கடந்த வாரம் சீன அரசு தனது நாணய மதிப்பை 1.9 சதவீதம் குறைத்ததால் இந்நாட்டுச் சந்தையில் பங்குச்சந்தையில் முதலீடு அதிகளவில் குறைந்து, தங்கம் மீதான முதலீடு அதிகரித்துக் காணப்பட்டது.

இதன் எதிரொலியாகத் திங்கட்கிழமை நாணய சந்தை வர்த்தகத்தில் தங்கத்தின் விலை கிராமிற்கு 8 ரூபாய் வரை அதிகரித்து வர்த்தகம் செய்யப்படுகிறது.

தங்கம் விலை

தங்கம் விலை

வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, தங்கம் மற்றும் வெள்ளி மீதான முதலீடு அதிகரித்துள்ளதால், 24 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 8 ரூபாய் அதிகரித்து 2,456 ரூபாய்க்கும், 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 9 ரூபாய் அதிகரித்து 2,613 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை

கடந்த ஒரு வாரமாக நிலையான வர்த்தகத்தை வெள்ளி பெற்று வந்தாலும், குறைவான அளவிலேயே உயர்வைச் சந்தித்தது. ஆனால் திங்கட்கிழமை வர்த்தகத்தில் 1 கிலோ பார் வெள்ளியின் விலை 1,600 ரூபாய் வரை அதிகரித்து 35,805 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

சீன நாணயம்

சீன நாணயம்

யுவான் மதிப்பு 1.9 சதவீதம் குறைந்ததால், அமெரிக்கச் சந்தை வலுவடைந்து பெடரல் ரிசர்வ் வங்கி தனது வட்டி விகித உயர்வைத் தற்காலிகமாக நிறுத்திவைக்கும் எனக் கடந்த வாரம் கணிப்புகள் வெளியானது. இதனைப் பொய்யாக்கும் வகையில், சீன நாணயம் மதிப்பு அமெரிக்க வட்டி விகித மாற்றத்தைப் பாதிக்காது என இன்று அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா பெடரல் ரிசர்வ்

அமெரிக்கா பெடரல் ரிசர்வ்

செப்டம்பர் மாத துவக்கத்தில் அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கி தனது வட்டி விகித மாற்றங்களை அறிவிக்கும். இதன் பின் இந்திய சந்தை உட்பட அனைத்து முக்கியச் சந்தைகளிலும் முதலீட்டு அளவு பாதிக்கும்.

தங்கம் மற்றும் வெள்ளி

தங்கம் மற்றும் வெள்ளி

அமெரிக்கா பெடரல் ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதத்தை உயர்த்தினால், பங்குச்சந்தையிலும் சரி, நாணய சந்தையிலும் சரி முதலீடு அதிகளவில் குறையும். இதனால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகளவில் குறையும் என்பது உறுதி.

டாலர்

டாலர்

இன்றைய நாணய சந்தை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 65.30 ரூபாயாக உள்ளது.

சமுக வளைதள இணைப்புகள்

சமுக வளைதள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+