மும்பை: புதன்கிழமை நாணய வர்த்தகத்தில் வங்கிகள் மத்தியிலான நிதி பரிமாற்றத்தில் சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலர் வலிமை அடைந்தது. இதன் காரணமாகக் காலை வர்த்தகத்திலேயே டாலருக்கு எதிரான இந்தியா ரூபாய் மதிப்பு 9 பைசா வரை குறைந்து 65.40 ரூபாயாகக் குறைந்தது.
இதன் மூலம் ரூபாய் மதிப்பு 2 வருடச் சரிவை எட்டி சந்தையைப் பதம்பார்க்கத் துவங்கியுள்ளது.

இந்தத் திடீர் உயர்வு குறித்து நாணய சந்தை வல்லுநர்கள் கூறுகையில், இந்திய சந்தையில் இறக்குமதியாளர்களுக்கு நிலவும் அதிகப்படியான டாலர் தேவை, யுவான் போன்ற முக்கிய நாணயங்களுக்கு எதிராக டாலர் மதிப்பு உயர்வு, பங்குச்சந்தையில் தொடர்ந்து குறைந்து வரும் முதலீடு ஆகியவை ரூபாய் மதிப்பைப் பாதித்து வருகிறது.
இந்நிலையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 119.25 புள்ளிகள் உயர்ந்து 27,950.79 புள்ளிகளையும், நிஃப்டி குறியீடு 31.50 புள்ளிகள் உயர்ந்து 8,498.05 புள்ளிகளை எட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications