மும்பை: உலக நாடுளின் நிலவும் மோசமான பொருளாதாரத்தின் காரணமாக இந்திய பங்குச் சந்தை தொடர் சரிவை சந்தித்து வருகிறது.
வியாழக்கிழமை வர்த்தகத்தில் 324 புள்ளிகளை இழந்த மும்பை பங்குச் சந்தை வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் மேலும் 241 புள்ளிகளை இழந்து தவிக்கிறது.
இந்நிலையில் இன்று காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 477 புள்ளிகள் வரை சரிந்து தரையை தட்டி 2015ஆம் ஆண்டு உயர்வை முழுமையாக குறைந்தது 2014ஆம் ஆண்டை எட்டியது சென்செக்ஸ்.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 241 புள்ளிகள் சரிந்து 27,366.07 புள்ளிகளை எட்டியது. இதேபோல் நிஃப்டி குறியீடும் 72.80 புள்ளிகளை எட்டி 8,299.95 புள்ளிகளை அடைந்துள்ளது.
சீன சந்தை
இத்தகைய நிலைக்கு முக்கிய காரணம் சீன சந்தையில் உற்பத்தி அளவு 47 புள்ளிகளாக குறைந்துள்ளது தான். இதனால் சீனாவில் இருந்து அதிகப்படியான அன்னிய முதலீடுகள், நாணய சந்தையின் பக்கம் திரும்பியது.
அலெக்சாண்டர் சிப்ரஸ்
இதன் பின் ஐரோப்பா சந்தையில், சரிவில் இருந்து மீண்டு வரும் கிரீஸ் நாட்டின் பிரதமர் அலெக்சாண்டர் சிப்ரஸ் பதவியில் இருந்து விலகுவதாக வெளியான செய்தி ஐரோப்பிய சந்தை மட்டும் அல்லாமல் உலக சந்தையும் பாதித்தது.
நாணய சந்தை
எனவே முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை காத்துக்கொள்ள அமெரிக்க சந்தையிலும், நாணய சந்தையிலும் உட்செலுத்தினர். இதன் காரணமாக வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் தங்கம் விலை மற்றும் டாலர் மதிப்பு அதிகளவில் உயர்ந்தது.


Click it and Unblock the Notifications