சென்னை: இந்திய பங்குச்சந்தையில் கருப்புத் தினமாகப் பதிவான திங்கட்கிழமை வர்த்தகத்திற்குச் சீனா மட்டும் தான் காரணமா என்றால், முழுமையாகக் கிடையாது. ஏனெனில் இத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்ள முடியாதது இந்திய சந்தையுடைய தவறு.
கடந்த ஒன்றறை வருடத்தில் இந்திய சந்தையில் தேர்தல் அலை, மோடி அலை என மாறிமாறி அடித்த அலையில் சர்வதேச சந்தைகளின் முன் இந்தியா கவர்ச்சிகரமான பொருளாக மாறியுள்ளது. குறிப்பாகப் பங்குச்சந்தை வர்த்தகத்தில் பங்குகளின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இங்கே தான் துவங்கியது பிரச்சனை.
முதலீட்டுச் சந்தைகள்
இந்த அலைகளில் Mid cap சந்தைகளில் முதலீடு மற்றும் லாப அளவிடுகள் பல மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாகப் பார்மா, எப்எம்ஜிசி ஆகிய துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு அதிகளவிலான உயர்வை எட்டியுள்ளது. உதாரணமாக ஏதேனும் நிறுவனம் சற்று அதிகமான லாபம் பெற்றால் உடனேயே அதன் மதிப்பு தாறுமாறாக உயர்ந்து விடுகிறது.
இது உண்மையா??
கடந்த வாரம் வரை பங்குச்சந்தை மற்றும் நிறுவன மதிப்பீடுகளைப் பார்க்கும் போது சிறப்பாகவே இருந்தது. இது உண்மையல்ல ஆனால் மத்திய அரசு இதனை மெய்யாக்கும் வண்ணம் முயற்சி செய்து வருகிறது. இதனைப் பயன்படுத்தி முதலீட்டாளர்களும் அதிகளவிலான லாபத்தைப் பார்த்தனர். இது தான் நிதர்சனமான உண்மை.
சீனா மட்டும் தான் காரணமா??
திங்கட்ரகிழமை மும்பை பங்குச்சந்தையில் ஏற்பட்ட 1624 புள்ளிகள் சரிவிற்கு முழுமையான சீனா தான் காரணம் என்று சொல்ல முடியாது, இந்திய சந்தைக்கும் இதில் பங்கு உண்டு.
அதிக மதிப்பீடு
பொதுவாகப் பங்குச்சந்தையில் பங்குகளின் விலை குறைவாக இருக்கும் போது அதனை வாங்குவதும், அதிக விலையில் உள்ளபோது அதனை விற்பதுமே நடைமுறை. ஆனால் கடந்த ஒரு வருடத்தில் முதலீட்டாளர்கள் பங்குகள் அதிக மதிப்பீடு செய்யப்பட்ட நிலையில் வர்த்தகம் செய்யப்பட்டது.
விலை மற்றும் லாப குறியீடு 19 மடங்கும் அதிகமாக உள்ளது.
வளர்ச்சி ஏதுமில்லை...
கார்பரேட் நிறுவனங்களின் செயல்பாடு மற்றும் பங்குகளின் மதிப்பு உயர்ந்தாலும், நடைமுறையில் வளர்ச்சி ஏதுமில்லை. குறிப்பாக அடிப்படை வளர்ச்சி கூட எட்டி முடியாத நிலையிலேயே கார்பரேட் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளது.
மோசமான காலாண்டு முடிவுகள்...
மோடி தலைமையிலான 6 காலாண்டுகளில் கடந்த 2 காலாண்டுகள் மோசமான வளரச்சையை எட்டியது. நிறுவனங்களின் பங்கு மதிப்பை ஒப்பிடும்போது நிதிநிலை மிகவும் மோசமாக இருந்தது. இதுவே உண்மையான நிலை..
சீனா
இந்நிலையில் சீனா வெறும், இந்திய சந்தையை அதிக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதை மூடி மறைக்கும் ஒரு கருவியே. சீனா மூலம் இந்திய நிறுவனங்களின் பங்குகள் தற்போது உண்மையான நிலைக்குத் திரும்பியுள்ளது என்று சொன்னால் மிகையாகாது.
நாணயக்கொள்கை
மேலும் கடந்த ஒரு வருடத்தில் ஐரோப்பா முதல் ஜப்பான் வரை அனைத்து நாடுகளும் தங்களது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தங்களது நாணயக் கொள்கையை எளிமையாக்கிக் கொண்டது.
அன்னிய முதலீடு
நாணயக் கொள்கை எளிமையாக்கியதன் மூலம் இந்திய சந்தையில் அனைத்துத் துறைகளிலும் அதிகளவிலான முதலீடு பெற்றது. இதுவும் இந்திய சந்தையை அதிகமதிப்புடையாகக் கணக்குக் காட்டி பெற்றவையே.
உண்மையில் இந்தியா வளர்ச்சி பெறுவதற்காக அதிக வாய்ப்புகள் உள்ளது, ஆனால் அதனை எட்டிப் பிடிப்பதில் தான் தாமதம் ஏற்படுகிறது.


Click it and Unblock the Notifications