மும்பை: ஆசிய சந்தையில் நிலவும் மந்தமான பொருளாதார நிலையின் காரணமாக முதலீட்டாளர்கள் தங்களது பங்கு இருப்பைத் தொடர்ந்து குறைத்து வருகின்றனர். இதன் எதிரொலியாக இந்திய சந்தையில் சென்செக்ஸ் காலை வர்த்தகத்தில் 1,100 புள்ளிகள் வரை சரிந்தது.
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 1624.51 புள்ளிகள் வரை சரிந்து 25,741.56 புள்ளிகளை எட்டியது.
ஆசிய சந்தையின் இத்தகைய நிலைக்கு சீனாவின் உற்பத்தி சரிவு, ஏற்றுமதி சரிவு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதனால் அமெரிக்க பங்குச்சந்தையிலும் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. மேலும் இச்சரிவை 2011ஆம் ஆண்டு சரிவுடன் ஒப்பீடு செய்யப்படுகிறது.
மேலும் இந்தய பங்குச்சந்தையில் முதலீடு தொடர்ந்து குறைந்து வருவதாலும், டாலர் தேவை அதிகரித்துள்ள காரணத்தினால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 66.57 ரூபாய் வரை சரிந்துள்ளது.
சென்செக்ஸ்
ஆசிய சந்தையில் முதலீடு அளவு குறைந்துள்ளதால், திங்கட்கிழமை காலை வர்த்தகத்திலேயே மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 1,100 புள்ளிகள் வரை சரிந்தது.
1,100 புள்ளிகள்...
வரலாறு காணாத அளவில் இந்திய சந்தையில் ஓரே நாளில் சென்செக்ஸ் இன்று 1,100 புள்ளிகள் வரை குறைந்து 26,276.25 புள்ளிகளை எட்டியுள்ளது. நிஃப்டியில் 328 புள்ளிகள் சரிந்து 7,971.20 புள்ளிகள் எட்டி 2015ஆம் ஆண்டு எட்டிய உயர்வை முழுமையாக இழந்துள்ளது.
ரூபாய் மதிப்பு
இந்திய சந்தை மற்றும் ஆசிய சந்தையில் முதலீடு குறைந்து வருவதால், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலையிலேயே 66.49 ரூபாயாகக் குறைந்துள்ளது. இதனால் நாணய சந்தையும் இன்று அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
உலகச் சந்தைகள்
சீனாவில் இன்று காலை வர்த்தகத்தில் மட்டும் 8.5% உயர்வை இழந்துள்ளது. இதனால் இந்திய சந்தையைப் போலவே சீனாவும் 2015ஆம் ஆண்டு உயர்வை முழுமையாக இழந்தது. இதேபோல் ஜப்பான், ஹாங்காங் ஆகிய சந்தைகளும் அதிகளவிலான சரிவை சந்தித்தது.
நாணய சந்தை
சர்வதேச சந்தையில் டாலர் மதிப்பு அதிகரித்துள்ளதால் இந்தியாவில் தங்கத்தின் விலை இன்று தாறுமாறாக உயர்ந்துள்ளது. சென்னை மற்றும் இந்தியாவின் பிற முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரத்தை தெரிந்துகொள்ள இதைக் கிளிக் செய்யவும்.
சமுக வளைதள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!



Click it and Unblock the Notifications