இத்தகைய மந்தமான பொருளாதார நிலையைக் களைய அளவிற்கு அதிகமாக மதிப்பிடப்பட்ட சீனா நாணயத்தை, சந்தை முதலீட்டாளர்களுக்கு இணங்க மதிப்பைக் குறைத்தது.
இதனால் உள்நாட்டுச் சந்தையில் ஏற்றுமதியாளர்களுக்கு லாபம் குறையவே ஏற்றுமதி அளவைக் குறைத்தனர். இதனால் வர்த்தகம் முழுமையாகப் பாதிக்கப்பட்டது.
நாணய சரிவின் மூலம் சீன சந்தையில் தொழிற்துறை உற்பத்தி மற்றும் கட்டுமானம் துறையின் வளர்ச்சி அதிகளவில் குறைந்தது. இதனால் சீன சந்தையில் நிலக்கரி, ஸ்டீல், காப்பர் மற்றும் பிற பொருட்களின் தேவை குறைந்தது.

இதனைத் தொடர்ந்து இந்தோனேஷியா, பிரேசில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பியா, தைவான், தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் உற்பத்தி மற்றும் வளர்ச்சி பாதித்துள்ளது.
சீனா பொருளாதாரத்துடன் ஐரோப்பிய சந்தைக்குக் கிரீஸ் நாட்டின் கடன் நிலுவை மற்றும் தேர்தல் பிரச்சனை மிகப்பெரிய பிரச்சனையாக விளங்குகிறது.


Click it and Unblock the Notifications