மும்பை: இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் சீனாவில் 8 சதவீதம் வரை சரிந்தாலும், ஐரோப்பிய சந்தையில் பங்குகள் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று துவக்கத்திலேயே 350 புள்ளிகள் வரை உயர்ந்தது.
செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 290.82 புள்ளிகள் உயர்ந்து 26,032.38 புள்ளிகளை எட்டி சந்தை முடிவடைந்தது.
மும்பை பங்குச்சந்தை
திங்கட்கிழமை வர்த்தக பாணியிலேயே இன்றும் வர்த்தகம் இருக்கும் எனக் கணிக்கப்பட்ட நிலையில் ஐரோப்பிய சந்தை இன்று இந்திய சந்தையைக் காப்பாற்றியுள்ளது.
சென்செக்ஸ்
வர்த்தகத் துவக்கத்திலேயே உயர்வுடன் துவங்கிய சென்செக்ஸ் குறியீடு 11 மணியளவில் மீண்டும் சந்தை சரிவு பாதையை நோக்கி பயணம் செய்து 430 புள்ளிகளை இழந்தது.
இதன் பின் 12.40 மணிக்குச் சந்தையில் முதலீடு அதிகரித்தன் மூலம் சுமார் 600 புள்ளிகள் மீண்டு 200 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் செய்யப்பட்டு வந்தது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 319.32 புள்ளிகள் உயர்ந்து 26,057.55 புள்ளிகளை எட்டியது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் இன்று பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தது. இன்றைய வர்த்தக முடிவில் நிஃப்டி குறியீடு 71.70 புள்ளிகள் உயர்வில் 7,880.70 புள்ளிகளை எட்டியது.
6 வருடம் சரிவு
திங்கட்கிழமை வர்த்தகத்தில் இந்திய பங்குச்சந்தை சுமார் 6 வருடத்தில் இல்லாத அளவிற்கு ஓரே நாளில் 1624 புள்ளிகள் வரை சரிந்து தரையைத் தட்டியது. இந்திய பங்குச்சந்தை வர்த்தகத்தில் இது கருப்புத் தினமாக வர்ணிக்கப்படுகிறது.
இழப்பு
திங்கட்கிழமை வர்த்தகத்தில் இந்திய சந்தையில் ஏற்றப்பட்ட 1624 புள்ளிகள் சரிவில் சுமார் 7 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளது. அதுமட்டும் அல்லாமல் 205 நிறுவனங்கள் 52 வாரச் சரிவை பதிவு செய்துள்ளது.
ரூபாய் மதிப்பு
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாய் மதிப்பு 40 பைசா உயர்ந்து 66.20 ரூபாய்க்கு மீண்டது. இதனால் நாணய பரிமாற்றச் சந்தையில் இந்திய ரூபாய் இன்று வலிமையான நிலையை எட்டியது.
உலகச் சந்தைகள்
இன்றைய வர்த்தகத்தில் சீனா 8 சதவீதம் வரை சரிந்தாலும், ஐரோப்பிய சந்தையில் அதிகளவிலான பங்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் இந்திய சந்தையில் இன்று காலை வர்த்தகம் துவக்கம் முதலே உயர்வைக் கண்டது.
சீனாவைப் போல் ஜாப்பன் இன்று சரிவை சந்தித்தது. ஆனாலும் ஹாங்காங், பிரட்டன், ஜெர்மனி மற்றும் இந்திய சந்தைகள் இன்று கணிசமான உயர்வைச் சந்தித்தது.


Click it and Unblock the Notifications