மும்பை: புதன்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு, காலை வர்த்தகம் துவக்கத்தில் ஏறுமுகமாக இருந்தாலும், வர்த்தக முடிவில் அதிகளவிலான சரிவை சரிந்திதுள்ளது.
கடந்த 2 நாள் வர்த்தகத்தில் அதிகளவிலான சரிவை சந்தித்த சீனா, ஹாங்காங் சந்தைகள் இன்று 2 சதவீத்திற்கும் குறைவான சரிவை சந்தித்துள்ளது. இதனால் இந்திய பங்குச்சந்தையில் காலை வர்த்தகத்தில் 100 புள்ளிகள் வரை உயர்ந்தது.

ஆனால் மதிய நேர வர்த்தகத்தில் ஐரோப்பிய சந்தையில் 1.5 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை சந்தித்ததால் மும்பை பங்குச் சந்தையில் 317 புள்ளிகள் வரை சென்செக்ஸ் குறீயிடு குறைந்தது.
இந்நிலையில் இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 317.72 புள்ளிகள் சரிந்து 25,714.66 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிஃப்டியும் 88.85 புள்ளிகள் சரிந்து 7,791.85 புள்ளிகளை எட்டி புதன்கிழமை வர்த்தகம் நிறைவடைந்தது.
நாணயச் சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 0.03 பைசா மட்டும் சரிந்து 66.13 ரூபாயாக வர்த்தகம் செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications