மும்பை: வியாழக்கிழமை பங்குச்சந்தையை வர்த்தகத்தில், உள்நாட்டுச் சந்தையில் ரியல் எஸ்டேட் மற்றும் மெட்டல் நிறுவன பங்குகள் அதிகளவில் உயர்ந்தது. இதனால் சென்செக்ஸ் குறியீடு சர்வதேச சந்தையின் நிலையில் பாதிப்படையாமல் 516 புள்ளிகள் வரை உயர்ந்தது.
இன்றைய வர்த்தகம் துவங்கும் முதலே உயர்வுடன் துவங்கிய மும்பை பங்குச்சந்தை, வர்த்தகம் முடியும் வரை தொடர் உயர்வு பாதையிலேயே இருந்தது.

இதனால் சென்செக்ஸ் குறியீடு 516.53 புள்ளிகள் வரை உயர்ந்து 26,231.19 புள்ளிகளை எட்டி இன்றைய சந்தை முடிவடைந்தது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும், 157.10 புள்ளிகள் உயர்ந்து 7,948.95 புள்ளிகளை அடைந்தது.
மேலும் இன்றைய வர்த்தகத்தில் எச்டிஎப்சி, வேதாந்தா, டாடா ஸ்டீல் லூபின் ஆகியவை அதிகளவில் உயர்ந்தாலும் பெல், பஜாஜ் ஆட்டோ, டாடா மோட்டார்ஸ் மற்றும் என்டிபிசி ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்தது.


Click it and Unblock the Notifications