இனி 24 மணிநேரத்தில் உங்கள் பணம் வாபஸ்.. சொல்கிறது பிளிப்கார்ட்..!
பெங்களூரு: நாட்டின் முன்னணி ஆன்லைன் விற்பனை நிறுவனமான பிளிப்கார்ட் திங்கட்கிழமை இன்ஸ்டன்ட் ரீபண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்புதிய சேவையின் மூலம் வாடிக்கையாளர்கள் தாங்கள் செலுத்திய பணத்தை 24 மணி நேரத்திற்குள் பெற முடியும்.

இதற்கும் முன் வாடிக்கையாளர் யாரேனும் பொருட்களை வாபஸ் அளித்துவிட்டால், அடுத்த 3 - 5 நாட்களில் தான் பணம் திரும்பக் கிடைக்கும். இது பிளிப்கார்ட் வாடிக்கையாளர்கள் விரும்பத்தகாத சேவையாகவே இருந்தது.
இச்சேவை இந்திய வங்கி அமைப்பில் இருக்கும் ஐஎம்பிஎஸ் பரிமாற்றத்தை மையமாகக் கொண்டு செயல்பட இருக்கிறது.
மேலும் வாடிக்கையாளர்களுக்குத் தங்களது பரிமாற்றம் குறித்த தகவல்களை எஸ்எம்எஸ் மற்றும் ஈமெயில் மூலம் உடனுக்குடன் தகவல்களை அளித்து வருகிறது.


Click it and Unblock the Notifications