டெல்லி: இந்திய சந்தையில் தங்க இறக்குமதியைக் கட்டுப்படுத்தவும், நாட்டின் வர்த்தக நிலையை (ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு மத்தியிலான வித்தியாசம்) மேம்படுத்தவும் நாடாளுமன்றத்தில் சவரன் தங்கம் முதலீட்டுப் பத்திர திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இத்தகைய பத்திரங்களில் முதலீடு செய்வதன் மூலம் முதலீட்டாளர்கள் தங்கத்தில் நேரடியாக முதலீடு செய்வது போல், முதலீட்டுக்கான மொத்த லாபத்தையும் பெற முடியும்.
இத்திட்டத்தை நிதியமைச்சர் 2014-15ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கையில் தெரிவித்திருந்தாலும், புதன்கிழமை நடந்த நாடாளுமன்றத்தின் மதிய நேரக் கூட்டத்தில் இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சவரன் தங்க பத்திர திட்டம்
இந்தப் பத்திரங்கள் தங்க மீதான வர்த்தகத்துடன் நேரடியாக இணைக்கப்படுவதால் பத்திரங்களின் விலை அளவு தங்கத்துடன் ஒத்து இருக்கும். மேலும் இது தங்கத்தில் நேரடியாக முதலீடு செய்வதற்கு மாற்று வழி.
இதனால் என்ன பயன்?
இத்தகைய முதலீட்டுப் பத்திரங்களில் முதலீடு செய்வதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு வட்டி வருமானம் கிடைப்பதுடன் முதிர்வு காலத்தில் முதலீட்டுத் தொகை மற்றும் வட்டி தொகை கணக்கிட்டு இதற்கு ஈடான தங்கத்தை நீங்கள் பெற முடியும்.
பத்திரத்தை விற்க முடியுமா?
முதலீட்டாளர்கள் சவரன் தங்கள் பத்திர திட்ட முதலீட்டில் இருந்து விலக வேண்டும் என்றால் எப்போது வேண்டுமானாலும் விற்றுவிடலாம். மேலும் இப்பத்திரம் அனைத்தும் குறைந்தகால 5 முதல் 7 ஆண்டுகள், நீண்ட கால முதலீட்டு நோக்கில் 12 முதல் 15 ஆண்டுகள் வரையிலான முதிர்வு காலம் உடையது.
பத்திரங்கள்
மத்திய அரசின் அறிவிப்பின் படி சவரன் தங்கள் பத்திர திட்டத்தின் கீழ் 2, 5 மற்றும் 10 கிராம் தங்கத்திற்கான முதலீட்டுப் பத்திரங்களை வெளியிடத் திட்டமிட்டுள்ளது. மேலும் கூடிய விரைவில் 10 கிராமிற்கும் அதிகமான தங்க முதலீட்டுப் பத்திரத்தை அறிவிக்கும் என எதிர்ப்பாக்கப்படுகிறது.
வரி மற்றும் பிணை..
சாதாரணத் தங்கத்தைப் போலவே நிலையான வட்டி விகிதத்தைச் சவரன் தங்கள் பத்திரமும் கொண்டுள்ளது. இதனை நீங்கள் வங்கிக் கடனுக்கான பிணையாகவும் அளிக்க முடியும். மேலும் இத்திட்டத்தில் என்ஆர்ஐ மற்றும் ஏனையோர் முதலீடு செய்ய முடியாது, இந்தியர்கள் மட்டுமே முதலீடு செய்ய முடியும்.
50 டன் தங்கம்
முதற்கட்டமாக மத்திய அரசு இப்பத்திரங்களின் மூலம் 50 டன் தங்கத்தைப் பத்திரம் மூலம் வர்த்தகம் செய்யது 13,500 கோடி ரூபாய் வர்த்தக அளவைப் பதிவு செய்யத் திட்டமிட்டுள்ளது.
தங்க இறக்குமதி..
இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 1,000 டன் தங்கத்தைப் பயன்படுத்துகிறோம். இதில் பெரும்பாலானவை இறக்குமதி செய்யப்பட்டவை. இத்தகைய இறக்குமதியைக் குறைக்கவே மத்திய அரசு சவரன் தங்கள் பத்திர திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
எண்ணெய் பின் தங்கம்...
இந்தியாவில் அதிகளவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் கச்சா எண்ணெய் முதல் இடத்திலும், தங்கம் இரண்டாம் இடத்திலும் உள்ளது. மேலும் ஒவ்வொரு காலாண்டிலும் அதிகளவிலான தங்க இறக்குமதியின் காரணமாக இந்தியாவில் நடப்பு கணக்குப் பற்றக்குறை பாதிப்படைந்து வருகிறது.
More From GoodReturns

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!



Click it and Unblock the Notifications