நடப்பாண்டில் உணவுப் பொருட்கள் உற்பத்தி அதிகரிக்கும்: அருண் ஜேட்லி
கேரளா: நடப்பு நிதியாண்டில் இந்தியாவில் பருவ மழை குறைவாக இருந்தாலும் உணவு உற்பத்தி கடந்த ஆண்டை விடவும் அதிகமாக இருக்கும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு வெளியிட்ட தகவலின் படி நடப்பாண்டில் விவசாயம் செய்யப்பட்ட நிலப்பரப்பு அதிகரித்துள்ளதால் உற்பத்தி கண்டிப்பாக அதிகரிக்கும் என அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
மேலும் உற்பத்தி அளவுகளைத் தற்போது கணிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கேரள மாநிலத்தில் நடந்த முக்கிய நிகழ்ச்சிக்காக வந்திருந்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி, நடப்பு நிதியாண்டில் பருவ மழையளவு 9% ஆகக் குறைந்துள்ள போதும் விளைச்சல் அதிகமாக இருக்கும் என அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications