மும்பை: சர்வதேச சந்தைகளின் மந்தமான பொருளாதார நிலையின் காரணமாக நாணய சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலை 3 வாரச் சரிவை எட்டி 10 கிராம் தங்கம் 26,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் கடந்த ஒரு வார வர்த்தகத்தில் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் நகை கடைக்காரர்கள் மத்தியில் தங்கத்தின் தேவை அதிகளவில் குறைந்துள்ளது. இதனால் உள்நாட்டுச் சந்தையிலும் தங்கம் விலை கிராமிற்கு 10 ரூபாய் வரை குறைந்துள்ளது.
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் 300 ரூபாய் வரை குறைந்து 35,000 ரூபாய் அளவுகளில் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி உயர்வு காரணங்களால் முதலீட்டாளர்கள் நாணய சந்தையில் தங்களது முதலீட்டைக் குறைத்து வருகின்றனர். மேலும் பெடரல் வங்கியின் அறிவிப்புகள் அடுத்த வாரம் வெளி வர உள்ள நிலையில் இந்திய பங்குச்சந்தையில் தொடர்ந்து முதலீடு குறைந்து வருகிறது.


Click it and Unblock the Notifications