எச்சிஎல்: தமிழ்நாட்டில் ரூ.6,000 கோடி முதலீடு.. மதுரை, நெல்லையில் புதிய அலுவலகம் திறக்க திட்டம்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இந்திய தகவல் தொழில்நுட்ப துறையில் வேகமாக வளர்ந்து வரும் எச்சிஎல் நிறுவனம், தனது விரிவாக்கப் பணிகளின் ஒரு பகுதியாக அடுத்த 5 வருடத்தில் தமிழ்நாட்டில் 1 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

 

தமிழ்நாடு

தமிழ்நாடு

எச்சிஎல் நிறுவனம் நெய்டாவை தலைமையிடமாகக் கொண்டு இந்தியா மற்றும் உலக நாடுகளில் இயங்கி வந்தாலும், தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் அதிகளவில் முதலீடு செய்து தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது.

எச்சிஎல்

எச்சிஎல்

இந்நிலையில் ஏற்கனவே தமிழ்நாட்டில் அதிகளவில் முதலீடு செய்த எச்சிஎல் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி டாலர் அதாவது 6,650 கோடி ரூபாய் தொகை முதலீடு செய்யப்படும் இந்நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஷிவ் நாடார் சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அறிவித்துள்ளார்.

ஷிவ் நாடார்
 

ஷிவ் நாடார்

சென்னை வர்த்தக மையத்தில் உலகளாவிய முதலீட்டாளர் மாநாட்டின் தொடக்க விழா கடந்த 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், எச்.சி.எல். நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார் உட்பட இந்திய மற்றும் உலக நாடுகளின் பல நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

6,000 கோடி ரூபாய் முதலீடு

6,000 கோடி ரூபாய் முதலீடு

தமிழகத்தில் ஆய்வுக்கான பணிக்காக இடங்களைத் தேர்வு செய்து வருகிறோம் எச்சிஎல் அடுத்த 5 ஆண்டுகளில் நிறுவன விரிவாக்கத்திற்காக 6,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.

மதுரை, நெல்லை

மதுரை, நெல்லை

இந்நிலையில் சென்னை, கோவை போன்ற தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் ஏற்கனவே எச்சிஎல் நிறுவனம் இயங்கி வரும் நிலையில் தற்போது மதுரை, நெல்லைப் பகுதிகளிலும் தனது கால்தடம் பதிக்க ஷிவ் நாடார் திட்டமிட்டுள்ளார்.

வருவாய்

வருவாய்

எச்சிஎல் நிறுவனத்தின் மொத்த ஆண்டு வருவாய், ரூ.45 ஆயிரம் கோடியாக உள்ளது. இந்நிறுவனத்தில் 1 லட்சம் ஊழியர்களுக்கு அதிகமானோர் பணியாற்றுகின்றனர்.

பணியாளர்கள்

பணியாளர்கள்

இதில் 75 ஆயிரம் பேர் இந்தியாவில் உள்ளனர். அவர்களில் 35 ஆயிரம் பேர் தமிழகத்தில் பணியாற்றுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

HCL group to invest $1 billion in Tamil Nadu

As part of its expansion plans in Tamil Nadu, IT major HCL Ltd today announced it would invest USD one billion in the next five years in the state.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X