அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கி கூட்டம் நாளை துவக்கம்.. சென்செக்ஸ் 150 புள்ளிகள் சரிவு..
மும்பை: அமெரிக்க அரசு கடன் பத்திரங்கள் மீதான வட்டி உயர்வு அறிவிப்புகளுக்கான கூட்டம் புதன்கிழமை (நாளை) துவங்க உள்ள நிலையில் சர்வதேச சந்தைகளில் இன்று முதலீடு அதிகளவில் குறைந்து வர்த்தகம் மந்தமடைந்தது.

இதனால் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை வர்த்தகம் துவக்கம் முதலே சரிவடையத் துவங்கியது.

செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 150.77 புள்ளிகள் சரிந்து 25,705.93 புள்ளிகளை அடைந்தது. இதேபோல் நிஃப்டி குறியீடு 43.15 புள்ளிகள் சரிந்து 7,829.10 புள்ளிகளை அடைந்து சந்தை முடிவடைந்தது.

நாணய சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 0.9 பைசா சரிந்து 66.46 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.
சர்வதேச சந்சையில் இன்று சீனா, ஹாங்காங், பிரான்ஸ், பிரட்டன் நாடுகளின் சந்தை இன்று சரிவுடன் உள்ளது.


Click it and Unblock the Notifications