மும்பை: அமெரிக்கச் சந்தையில் பணவீக்கத்தின் அளவு தொடர்ந்து 0 சதவீதமாக இருப்பதாலும், வங்கிகளில் குறைந்த அளவிலான வட்டி விகிதத்தில் கடன் கிடைத்து வருவதால் செயற்கையாகப் பணவீக்கத்தை உயர்த்தும் நடவடிக்கையில் பெடரல் ரிசர்வ் இறங்கியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்கப் பெடரல் வங்கி தனது வட்டி உயர்வதன் மூலம் அமெரிக்காவின் பணவீக்கத்தின் அளவு எதிர்மறை நிலையை அடையவும் வாய்ப்பு உள்ளதால், வட்டி உயர்வு நடவடிக்கையை டிசம்பர் மாதம் வரை ஒத்திவைக்க வாய்ப்புகள் உள்ளது.

மேலும் அமெரிக்க வர்த்தகச் சந்தையிலும் வட்டி விகித உயர்விற்கு எதிர்ப்பு அதிகரித்துள்ளதால் பங்குச்சந்தை வர்த்தகத்தில் செவ்வாய்க்கிழமை அமெரிக்கச் சந்தை உயர்வுடன் முடிவடைந்தது.
இதனால் புதன்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சுமார் 258.04 புள்ளிகள் உயர்ந்து 25,963.97 புள்ளிகளை எட்டியுள்ளது.
இதேபோல் நிஃப்டி குறியீடு 70.05 புள்ளிகள் உயர்ந்து 7,899.15 புள்ளிகள் வரை உயர்ந்து சந்தையின் வர்த்தகம் முடிவடைந்தது.


Click it and Unblock the Notifications