மும்பை: அமெரிக்கப் பெடரல் வங்கியின் வட்டி உயர்வு குறித்த முடிவுகளை எதிர்பார்த்துக் கடந்த ஒரு வாரமாக இந்திய சந்தை தொடர்ந்து சரிவு பாதையிலேயே இருந்தது.
இந்நிலையில் வியாழக்கிழமை நடந்து முடிந்த கூட்டத்தில் வட்டி உயர்வு நடவடிக்கையை டிசம்பர் மாதம் வரை பெடரல் வங்கி ஒத்திவைத்தது.
இதன் எதிரொலியாக வாரத்தின் கடைசி நாள் வர்த்தகத்திலும், மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீடு சுமார் 500 புள்ளிகள் வரை உயர்ந்து 207.41 புள்ளிகள் உயர்வில் சந்தை முடிவடைந்தது.
மும்பை பங்குச் சந்தை
பெடரல் வங்கியின் அறிவிப்புகளின் காரணமாக இன்றைய வர்த்தகம் துவங்கும் முதலே மும்பை பங்குச் சந்தை மற்றும் நாணயச் சந்தை உயர்வுடனே துவங்கியது.
சென்செக்ஸ் குறியீடு
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 202.29 புள்ளிகள் வரை உயர்ந்து 26,166.26 புள்ளிகளை எட்டியது. இதனால் வங்கிப் பங்குகள், ரிலையன்ஸ், சன் பார்மா போன்ற முக்கிய நிறுவனங்கள் இன்று அதிகளவில் உயர்ந்தது.
நிஃப்டி குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் இன்று வர்த்தகம் துவக்கம் முதலே உயர்வுடன் துவங்கி 82.75 புள்ளிகள் உயர்வில் 7,981.90 புள்ளிகள் வரை உயர்ந்தது.
சுக்கிரன் பார்வை..
பெடரல் வங்கியின் இந்த முடிவால் இந்திய பங்குச்சந்தையில் இனி வரும் நாட்களில் அன்னிய முதலீட்டாளர்கள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களின் முதலீடு தொடர்ந்து அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications