டெல்லி: இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) கூடிய விரைவில் அமலாக்கம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், ஜிஎஸ்டி வரி அமைப்பின் தொழில்நுட்ப பிணைப்புகளை உருவாக்கம் மற்றும் மேலாண்மை பணிகளை மேற்கொள்ள அரசு நாட்டில் சிறந்த நிறுவனத்தைத் தேடிவந்தது.
இன்போசிஸ் தேர்வு...
அரசின் பல்வேறு ஆலோசனைகளுக்குப் பின் ஜிஎஸ்டி வரியின் தொழில்நுட்ப அமைப்பை வடிவமைக்கும் இந்த 1,380 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டத்தை இன்போசிஸ் நிறுவனத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.
இத்திடத்தை கைபற்ற மைக்ரோசாப்ட் உட்பட பல நிறுவனங்கள் போட்டி போட்டுள்ளது. போட்டிக்கான முழு விபரகங்களை காண கடைசி ஸ்லைடரை பார்க்கவும்...
தனி நிறுவனம்
இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரியை அமலாக்கம் செய்யப்பட்டால், அதிகளவிலான தகவல்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கவேண்டிய நிலை உருவாகும். இதனைச் சமாளிக்க மத்திய அரசு ஜிஎஸ்டி நெட்வொர்க் (GSTN) என்னும் தனி நிறுவனத்தை நிறுவியுள்ளது.
ஜிஎஸ்டி சேவைக்கு இந்நிறுவனம் தொழில்நுட்ப உதவி நிறுவனமாக விளங்கும், மாநிலங்களின் தகவல்களை (Database) இணைக்கும் பணியில் இந்நிறுவனம் ஈடுபட உள்ளது.
வடிவமைப்பு
இன்போசிஸ் வடிவமைக்கப்பட உள்ள இத்திட்டத்தில், வரி செலுத்துவோர் பான் எண்ணை கொண்டு தங்களது கணக்கை துவங்கும் முதல், வரியைச் செலுத்துதல், வரிக்கான பணத்தை இணையம் வாயிலாகவே அரசுக்குச் செலுத்தும் முறை ஆகிய சேவைகளை இன்போசிஸ் உருவாக்க உள்ளது.
வரி ஏய்ப்பு
ஜிஎஸ்டி வரித் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் மாநில வருவாய் வரி அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுத் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட உள்ளது. இதன் மூலம் வரி ஏய்ப்புகளை அதிகளவில் தடுக்க முடியும் என மத்திய அரசு நம்புகிறது.
1,380 கோடி ரூபாய் திட்டம்
இத்திட்டத்தை வடிவமைக்கவும், மாநில அலுவலகங்களில் நிறுவ மத்திய அரசு இன்போசிஸ் நிறுவனத்திற்குச் சுமார் 1, 380 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
மேலும் திட்டத்தை அமலாக்கம் செய்யப்பட்ட உடன் அடுத்த 5 வருடத்திற்கு இதனை முழுமையான கண்காணிப்பு மற்றும் பழுது பிரச்சனைகளைச் செய்யவும் இன்போசிஸ் நியமிக்கப்பட்டுள்ளது என ஜிஎஸ்டி நெட்வொர்க் நிறுவன தலைவர் நவீன் குமார் தெரிவித்துள்ளார்.
மார்ச் வரை..
இந்தியாவில் அதிகளவில் சாப்ட்வேர் விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்யும் இன்போசிஸ் நிறுவனம் ஜிஎஸ்டி தளத்தை உருவாக்கும் பணிகளைத் துவங்கியுள்ள நிலையில், வருகிற அக்டோபர் 1ஆம் தேதி முதல் வரி செலுத்துவோர் தங்களது கணக்கை திறந்துகொள்ளலாம்.
2016ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இதற்கான பணிகள் முழுமையாக முடிக்க இன்போசிஸ் நிறுவனத்திற்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஏப்ரல் 1
2016ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் சரக்கு மற்றும் சேவை வரியை இந்தியா முழுவதும் அமலாக்கம் செய்யத் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
போட்டி..
இத்திட்டத்திற்கான போட்டியில் இன்போசிஸ் உட்பட டிசிஎஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா மற்றும் மைக்ரோசாப்ட் ஆகியவை இருந்ததாக நவீன் குமார் தெரிவித்தார்.
திடுக்கிடும் சர்வே..!
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications