மும்பை: வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு மாலை நேர வர்த்தகத்தில் திடீரென 570 புள்ளிகள் வரை சரிந்து முதலீட்டாளர்கள் வயிற்றில் புளியை கறைத்தது.
செவ்வாய்க்கிழமை வர்த்தகம் துவங்கும் முதலே மும்பை பங்குச்சந்தை குறைவான வர்த்தகத்தை பெற்றாலும் 1 மணி வரையில் உயர்வுடன் காணப்பட்டது.
அமெரிக்காவும்... சீனா..
அமெரிக்க பெடரல் வங்கியின் முடிவுகளின் எதிரெலியாக நாஸ்டாக் மற்றும் டாவ் ஜோன்ஸ் வெள்ளிக்கிழமை வர்த்தகம் சரிவில் முடிந்தது. அதேபோல் திங்கட்கிழமை வர்த்தகம் மிகவும் குறைவான வர்த்தகத்தை பெற்று சர்வதேச சந்தையை அதிகளவில் பாதித்தது.
சீனாவில் பொருளாதாரம் மற்றும் பங்குச்சந்தை வர்த்தகம் தொடர்ந்து சரிவிலேயே உள்ளது. இதன் காரணங்களாக மும்பை பங்குச்சந்தையின் வர்த்தகம் இன்று காலை முதல் மந்த நிலையிலேயே இருந்தது.
மதர்சன் சுமி..
இந்தியாவில் மிகப்பெரிய ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் உற்பத்தி நிறுவனமான மதர்சன் சுமி, வோக்ஸ்வாகன் நிறுவனத்துடனான வர்த்தகத்தில் நடைமுறை பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை சார்ந்த நிறுவனங்களின் பங்கு வர்த்தகம் மந்தமான நிலையில் இருந்து.
மதர்சன் சுமி நிறுவனத்தின் பங்குகள் இன்று 9 சதவீதம் வரை சரிந்தது குறிப்பிடதக்கது.
எண்ணெய் விலை
இந்தியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி கடந்த 5 வருடங்களில் இல்லாத அளவிற்கு ஆகஸ்ட் மாதம் 5.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. கமாடிட்டி சந்தையில் இருந்த அதிகளவிலான முதலீடு இன்று பங்குச்சந்தைக்கு மாறியதல் கச்சா எண்ணெயின் விலையும் குறைந்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை
செவ்வாய்கிழமை வர்த்தகம் துவங்கும் முதல் 100 புள்ளிகள் உயர்வுடனே காணப்பட்ட சென்செக்ஸ் குறியீடு ஐரோப்பிய சந்தை துவங்கிய உடன் மள மளவென சரிந்தது.
ஐரோப்பிய சந்தை
கிரீஸ் நாட்டில் புதிய ஆட்சி மற்றும் ஐரோப்பிய சந்தையில் நிலவும் பொருளாதார பிரச்சனைகளின் காரணமாக இன்று அதிகளவிலான முதலீடுகள் வெளியேற்றப்பட்டன. இதன் காரணமாக சீனா மற்றும் இந்திய சந்தை இன்று அதிகளவில் பாதிக்கப்பட்டன.
சென்செக்ஸ்
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 541.14 புள்ளிகள் சரிந்து 25,651.84 புள்ளிகளை அடைந்தது. இதனால் சந்தையில் முக்கிமான நிறுவனங்கள் பெரும்பாலானவை இன்று சரிவில் முடிந்தது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் 165.10 புள்ளிகள் சரிவில் 7812 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.


Click it and Unblock the Notifications