மும்பை: உலகின் முன்னணி வர்த்தகம் மற்றும் தொழிற்துறை ஆய்வு நிறுவனமான ஃபோர்ப்ஸ், இந்தியாவின் டாப் 100 பில்லியனர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. உலக நாடுகள் மத்தியில் ஃபோர்ப்ஸ் நிறுவன ஆய்வு முடிவுகளுக்கு முக்கிய இடம் உண்டு.
இந்நிலையில் 2015ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் 100 பில்லியனர்கள் பட்டியலில் வெறும் 4 பெண்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.
4 பெண்கள்
ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள 100 பில்லியனர்கள் கொண்ட பட்டியலில் சாவித்ரி ஜின்டால், லீனா திரிவாரி, வினோத் குப்தா மற்றும் இந்து ஜெயின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சாவித்ரி ஜின்டால்
ஓ.பி ஜின்டால் குரூப் நிறுவனத்தின் தலைவரான சாவித்ரி ஜின்டால் 3.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இப்பட்டியலில் 23வது இடத்தைப் பிடித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவின் முதன்மையான பெண் பணக்காரர் என்ற பெயரையும் சாவித்ரி ஜின்டால் பெற்றுள்ளார்.
லீனா திரிவாரி
யுஎஸ்வி பார்மா நிறுவனத்தின் தலைவரான லீனா திரிவாரி 1.9 பில்லியன் டாலர் மதிப்புடன் 54வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்து ஜெயின்
பெனென்ட், கோல்மேன் அண்ட் கோ நிறுவனத்தின் தலைவரான இந்து ஜெயின் 1.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஃபோர்ப்ஸ் நிறுவன பட்டியலில் 57 வது இடத்தைப் பிடித்துள்ளார்.
வினோத் குப்தா
ஹேவெல்ஸ் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் குவிமத் ராய் குப்தா கடந்த நவம்பர் 2014ஆம் ஆண்டு இறந்துப்போனார். இதன் பின் ஹேவெல்ஸ் இந்தியா நிறுவனத்தில் அவர் வைத்திருந்த பங்குகள் அனைத்தும் வினோத் குப்தாவிற்குக் கிடைத்தது.
இதன் மூலம் வினோத் குப்தா 1.6 பில்லியன் டாலர் சொத்துக்களுக்குச் சொந்தக்காரர் ஆனார். ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள இப்பட்டியலில் வினோத் குப்தா 74 வது இடத்தைப் பிடித்துள்ளார்.
9.2 பில்லியன் டாலர்
இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள 4 பெண்களின் மொத்த சொத்து மதிப்பு 9.2 பில்லியன் டாலர். மொத்த மதிப்பீடான 345 பில்லியன் டாலர் சொத்து மதிப்பில் இது வெறும் 3 சதவீதம் மட்டுமே.
முதல் இடம்..
ஃபோர்ப்ஸ் நிறுவன பட்டியலில் 9 வருடமாகத் தொடர்ந்து முதல் இடத்தைப் பிடித்துள்ளார் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி.
முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி 18.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
கடந்த வருடத்தை ஒப்பிடும் போது இவரின் சொத்து மதிப்பு சுமார் 3 சதவீதம் சரிந்துள்ளது.
திலிப் சங்வி
இந்தியாவின் முன்னணி மருந்த உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனமான சன் பார்மா நிறுவனத்தின் தலைவர் திலிப் சங்வி 18 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இப்பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.
அசிம் பிரேம்ஜி
பெங்களூரை தலைமையகமாகக் கொண்டு உலக முழுவதும் விரிந்து இருக்கும் விப்ரோ நிறுவனத்தின் தலைவர். அதிகளவிலான நன்கொடையின் மூலம் இவரது சொத்து மதிப்புக் குறைந்தாலும் 15.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இப்பட்டியலில் 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.
எஸ்.பி ஹிந்துஜா மற்றும் குடும்பம்
ஹிந்துஜா சகோதரர்கள் இப்பட்டியலில் 14.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 4வது இடத்தைப் பிடித்துள்ளார்.
பலோன்ஜி மிஸ்திரி
இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் கட்டுமானத்துறையில் சிறந்து விளங்கும் பலோன்ஜி மிஸ்திரி அவர்களின் வர்த்தகத்தின் மூலம் சுமார் 14.7 பில்லியன் டாலர் சொத்துக்களுக்கு அதிபதியாக உள்ளார். ஃபோர்ப்ஸ் நிறுவன பட்டியலில் பலோன்ஜி மிஸ்திரி 5 வது இடத்தைப் பிடித்துள்ளார்.
டாடா குழுமத்தின் மிகப்பெரிய பங்குதாரராகவும் இவர் உள்ளார். மேலும் இவரது மகன் சைரஸ் மிஸ்திரி அவர்கள் டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.
ஷிவ் நாடார்
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் நிறுவனத்தின் தலைவரான ஷிவ்நாடார் இப்பட்டியலில் 12.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 6வது இடத்தைப் பிடித்துள்ளார்.
கோத்ரேஜ் குடும்பம்
ஆதி கோத்ரேஜ் மற்றும் அவர்களது மொத்த சொத்து மதிப்பு 11.4 பில்லியன் டாலராக உயர்ந்து இப்பட்டியலில் 7வது இடத்தைப் பெற்றுள்ளார். கோத்ரேஜ் குழுமம் இந்தியாலில் 117 வருடங்களாகச் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தலைவர் ஆதி கோத்ரேஜ்.
லக்ஷ்மி மிட்டல்
எஃகு உற்பத்தியில் இந்தியா மற்றும் பிரிட்டன் நாடுகளில் முன்னணி நிறுவனமாகத் திகழும் லக்ஷ்மி மிட்டல் கடந்த சில மாதங்களாக மந்தமான வர்த்தகம் மற்றும் வளர்ச்சியை அடைத்து வருவதால் இவரது சொத்து மதிப்பு 11.2 பில்லியன் டாலராகக் குறைந்து 8வது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.
சைரஸ் பூனாவாலா
தடுப்புமருந்து தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சியில் ஈட்டுப்பட்டுள்ள சைரஸ் பூனாவாலா 7.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளார்.
கே.எம்.பிர்லா
ரிலையன்ஸ் குழுமத்தை போலப் இந்திய சந்தையில் பல துறைகளில் சிறந்து விளங்கும் ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமாரமங்களம் பிர்லா, 7.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இப்பட்டியலில் 10வது இடத்தில் உள்ளார்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications