டெல்லி: கடந்த 3 நாட்களாகச் சர்வதேச சந்தையில் நிலவும் குறைவான முதலீடு மற்றும் உள்நாட்டில் தேவை குறைவு ஆகியவை செவ்வாய்க்கிழமை புல்லியன் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான முதலீட்டை அதிகளவில் குறைத்தது. இதனால் தங்கம் விலை கிராமிற்கு 23 ரூபாய் வரையில் சரிவை சந்தித்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் 24 கேரட் 10 கிராம் தங்கம் 235 ரூபாய் வரை குறைந்து 26,575 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
அதேபோல் வெள்ளியின் விலையும் 900 ரூபாய் வரை சரிந்துள்ளது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 900 ரூபாய் குறைந்து 34,700 ரூபாய்க்குச் சென்னையில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையைப் பார்க்கும் போது, அமெரிக்கப் பெடரல் வங்கி தனது வட்டி விகித உயர்வை டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளதால், முதலீட்டாளர்கள், அமெரிக்கச் சந்தை சார்ந்த முதலீட்டிலேயே அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாகவே புல்லியன் சந்தையில் தொடர்ந்து முதலீடு குறைந்து வருகிறது.
இதனால் சர்வதேச நாணய சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 0.6 சதவீதம் குறைந்து 1,125.72 டாலராக உள்ளது. இந்நிலையில் இந்திய சந்தையில் தேவைகள் அதிகளவில் குறைந்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம், வெள்ளி விலை கிடுகிடு உயர்வு: முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!



Click it and Unblock the Notifications