மும்பை: ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் விகிதத்தை நேற்று 50 புள்ளிகள் குறைத்ததையடுத்து, வணிக வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதங்களைக் குறைத்து வருகின்றன.
எஸ்பிஐ
இதன் படி நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ரிசர்வ் வங்கியின் அறிவிப்பைத் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் கடனுக்கான வட்டி விகிதத்தில் 40 புள்ளிகள் குறைத்து 9.30 சதவீதமாக அறிவித்துள்ளது.
ஆந்திரா வங்கி
செவ்வாய்க்கிழமை ரிசர்வ் வங்கியின் கூட்டம் முடிந்த அடுத்தச் சில மணி நேரத்தில் ஆந்திரா வங்கி, பேஸ் ரேட் எனப்படும் அடிப்படை வட்டி விகிதத்தை 25 புள்ளிகள் குறைந்து 9.75 சதவீதமாக அறிவித்துள்ளது.
தனியார் வங்கிகள்
இந்நிலையில் நாட்டின் வங்கிச் சந்தையில் மிகப்பெரிய பங்கை வைத்திருக்கும் ஐசிஐசிஐ, எச்டிஎப்சி, ஆக்சிஸ் வங்கி ஆகிய தனியார் வங்கிகள் இன்று அல்லது அடுத்த 3 வேலை நாட்களுக்குள் தங்களது வட்டி குறைப்பு குறித்த அறிவிப்புகளை அறிவிக்கும் எனத் தெரிகிறது.
பேஸ் ரேட்
வங்கிகளில் பேஸ் ரேட்-யை மையமாகக் கொண்டு தான் அனைத்து வட்டி விகிதங்களும் கணக்கிடப்படுகிறது. தனிநபர் கடன் முதல், வீட்டுக் கடன், வாகனக் கடன்களின் ஈஎம்ஐ என அனைத்தும் கணக்கிடப்படுகிறது.
பேஸ் ரேட்டில் வித்தியாசம் ஏற்பட்டால் நாம் வாங்கிய கடனுக்கான ஈஎம்ஐ-யும் மாறுபடும்.
புதிய கணக்கீட்டு முறை..
ரிசர்வ் வங்கி தனது வட்டி விகித்தை குறைத்தாலும் வங்கிகள் மக்களுக்கு அளிக்கப்படும் கடனுக்கான வட்டியைக் குறைக்க மறுத்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் வங்கிகளின் கணக்கீட்டு முறை தான்.
செலவின கணக்கீட்டு
ரிசர்வ் வங்கி செப்டம்பர் 1ஆம் தேதி அறிவிப்பின் படி வங்கிகள் செலவினத்தை மையமாகக் கொண்டு பேஸ் ரேட்-யை கணக்கிட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இதற்கான சில மாற்றங்கள் மற்றும் கோரிக்கைகளை வங்கித் தரப்பு ஆர்பிஐ-யிடம் தெரிவித்துள்ளது.
இதனால் நவம்பர் மாத இறுதிக்குள் கணக்கீட்டு முறைக்கான முழுமையான திட்ட வடிவத்தை ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகளுக்கு அளிக்கப்பட உள்ளது.
ரிசர்வ் வங்கி
2015ஆம் துவக்கம் முதல் ரிசர்வ் வங்கி சுமார் நான்கு முறை தனது வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது. இதனால் கடந்த 10 மாதத்தில் ஆர்பிஐ ரெப்போ விகிதத்தை 1.25 சதவீதம் வரை வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளது.
ஆனால் வங்கிகள் மிகவும் குறைவான அளவிலேயே தனது வட்டி விகிதங்கள் மட்டும் குறைத்துள்ளது.
வங்கி IFSC குறியீடு
இணையதளத்தில் வங்கி IFSC மற்றும் MICR குறியீடுகளை தேடி அலைய வேண்டாம்.. இங்கே ஒரு கிளிக் செய்தால் போதும்.. கவலை தீர்ந்தது..
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..


Click it and Unblock the Notifications