மும்பை: சர்வதேச பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் மற்றும் முதலீடு அதிகரித்துள்ளதால் சீன சந்தை உட்பட ஜப்பான், ஹாங்காங் சந்தைகளும் இன்றும் உயர்வுடன் முடிவடைந்தது. இதன் எதிரொலி இந்திய சந்தையிலும் கணிசமாகத் தெரிந்தது.
மும்பை பங்குச்சந்தையில் புதன்கிழமை காலை வர்த்தகம் துவங்கும் முதலே உயர்வுடன் துவங்கிய வர்த்தகம், ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு அறிவிப்பினால் அனைத்து முக்கியத் துறைகளும் நிலையான வர்த்தகத்தைப் பெற்றுச் சென்செக்ஸ் உயர்வுடனே காணப்பட்டது.
சென்செக்ஸ்
புதன்கிழமை வர்த்தக முடிவில் சென்செகஸ் குறியீடு சுமார் 376.17 புள்ளிகள் உயர்ந்து 26,154.83 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
நிஃப்டி..
இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் நிலையான வர்த்தகத்தைப் பெற்று 105.60 புள்ளிகள் உயர்வுடன் 7,948.90 புள்ளிகள் எட்டிய சந்தை முடிவடைந்தது.
சர்வதேச சந்தை
புதன்கிழமை வர்த்தகத்தில் ஜப்பான் சந்தை 2.70% உயர்வுடனும், சீன சந்தை 0.48 சதவீத உயர்வுடனும், ஹாங்காங் சந்தை 1.28 சதவீத உயர்வுடனும் இருந்தது.
இதேபோல் பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிரிட்டன் சந்தைகள் இன்று உயர்வுடனே துவங்கியுள்ளது.
4 சதவீத உயர்வு
இன்றைய ஒரு நாள் வர்த்தகத்தில் டாடா ஸ்டீல், பார்தி ஏர்டெல் மற்றும் பெல் ஆகிய நிறுவனங்கள் 4 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அதிலும் டாடா ஸ்டீல் நிறுவனம் சுமார் 5.24 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
டாடா ஸ்டீல்
இந்நிறுவனத்திற்குப் பல நாட்களாக நிலவிய இரும்பு தாது பற்றாக்குறை தற்போது தீர்ந்துள்ளதால், இந்நிறுவனப் பங்குகள் இன்று மும்பை பங்குச்சந்தையில் 5.24 சதவீத வரை உயர்வடைந்துள்ளது.
வங்கித்துறை
ரிசர்வ் வங்கி செய்த வட்டிக்குறைப்பினால் அனைத்துத் துறைகளும் லாபம் அடைந்தாலும், வங்கித்துறை பங்குகள் இன்று குறைவான வர்த்தகத்தைப் பெற்றும் ஆக்சிஸ் வங்கி, எஸ்பிஐ வங்கி, எச்டிஎப்சி போன்றவை சரிவை சந்தித்துள்ளது.
பாலியல் குற்றங்கள்
முதல் இடத்தை பிடித்தது இந்தியா..!
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..


Click it and Unblock the Notifications