'ஐடி பசங்க' நிலைமை ரொம்பவே மாறிவிட்டது.. அப்படி என்ன ஆச்சு..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: இந்தியத் தொழில் துறைகளில், தகவல் தொழில்நுட்பத் துறைக்கு, அட அந்தாங்க சாப்ட்வேர் துறைக்கு மிகப் பெரிய வரலாறு உள்ளது. ஒரு காலத்தில் இதில் பணிபுரிவோறேல்லாம் கொடுத்து வெச்சவங்க அப்படின்னு பேசப்பட்டவர்கள்.

 

சம்பளங்களில் அவர்களுக்குக் குறைவின்றி இருந்ததுடன் செலவு செய்வதில் அவர்கள் சுதந்திரப் பறவைகளாக இருந்தார்கள். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டாலும் மக்கள் மத்தியில் அவர்கள் மதிப்பு குறையவில்லை.

இந்த மதிப்பை நிலை நாட்ட இந்த ஐடி பசங்க படும் பாட்டையும், அவர்களின் உண்மையான நிலைமையை இப்போதும் பார்ப்போம் வாருங்கள்..

ஐடி என்றாலே யோ யோ பாயிஸ் தான்..

ஐடி என்றாலே யோ யோ பாயிஸ் தான்..

இந்தியாவில் இருந்த தொழில் வல்லுநர்களில் ஒரு பெரிய சதவிகிதம் இவர்கள் தான், அதிலும் அதிகம் செலவு செய்பவர்களாகவும் இவர்கள் இருந்தார்கள். இவர்களை நம்பிப் பல வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழிற்துறை செயல்பட்டு வந்தது என்றே கூறலாம்.

முற்றிலும் மாறியது..

முற்றிலும் மாறியது..

ஆனால் தற்போது இந்த ஐடி துறையில் நிலவி வரும் ஏற்ற இறக்கங்கள் இந்தச் சூழ்நிலையை இறங்குமுகமாக மாற்றிவிட்டது.

இதனால் இத்துறை பணி வல்லுநர்கள் அவர்களுடைய செலவு செய்யும் போக்கில் நிறையச் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர்.

வேலை வாய்ப்புக்கள் : மங்கி வருகிறது, மாறி வருகிறது
 

வேலை வாய்ப்புக்கள் : மங்கி வருகிறது, மாறி வருகிறது

கடந்த சில மாதங்களாக ஐடி துறை வேலைவாய்ப்புக்களில் குறிப்பிடத்தக்க தட்டுப்பாட்டைக் கண்டுள்ளது. அப்படியே வேலைவாய்ப்புகள் இருந்தாலும் அவை குறைந்த வருடச் சம்பள அடிப்படையில் உள்ள வேலைவாய்ப்புகளாக மாற்றப்பட்டுள்ளன.

வளர்ச்சியும் கேள்விக்குறி...

வளர்ச்சியும் கேள்விக்குறி...

110 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய இந்திய ஐடி தொழில் துறை திடீர் தொய்வைச் சந்தித்ததுடன் அதன் வளர்ச்சியும் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த மாற்றம் ஐடி பணியாளர்களைப் பாதித்துள்ளதுடன் இந்த மாற்றத்தை எதிர்கொள்ள அவர்கள் தங்கள் செலவினங்களைக் குறைத்துக்கொள்ளவும் செய்துள்ளது.

வருமானத்திற்கும் பணவீக்கத்திற்கும் இடையிலுள்ள சமநிலை குறைபாடு

வருமானத்திற்கும் பணவீக்கத்திற்கும் இடையிலுள்ள சமநிலை குறைபாடு

பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் வீடுகள் வீட்டு மனைகள், துணிமணிகள், பெட்ரோல் டீசல் என ஒவ்வொரு துறையும் குறிப்பிடத்தக்க மாற்றத்தைச் சந்தித்து வருகின்றன.

ஆனால் இந்தப் பணவீக்க அளவை ஒப்பிடும்போது அவர்களுக்குக் கிடைக்கும் சம்பள உயர்வு ஏணி வைத்தாலும் எட்டாது. இந்த ஒரு காரணம் ஐடி பணியாளர்கள் முன்போல் செலவு செய்வதை நிருத்திவிட்டதற்கு முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

அபாயங்கள் அதிகரிப்பு

அபாயங்கள் அதிகரிப்பு

ஐடி துறை தொழிலில் ஏற்பட்டுள்ள மந்த நிலை பணியாளர்களுக்கு வேலைப் பறிபோகும் அபாயத்தையும் அதிகரித்து அவர்களுக்கு ஒரு பெரும் சவாலாக மாறியுள்ளது.

இந்தத் துறை நிறுவனங்கள் ஒப்பந்தங்கள் இல்லாதபோது தங்கள் பணியாளர்களை "பெஞ்ச்" முறையில் வைத்திருக்கும். அதாவது இந்த முறையில் பணியின்றி அவர்களுக்குச் சம்பளம் வழங்கும். இந்தப் பெஞ்ச் முறை கால அளவு ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மாருமபடுவதுடன் அதிகப் பட்சம் ஆறு மாதம் வரை இருக்கும்.

சம்பள உயர்வு குறைவுதான்

சம்பள உயர்வு குறைவுதான்

ஐடி துறை வர்த்தகம் குறைந்துள்ள நிலையில் இத்துறை நிறுவனங்கள் பெரும் நஷ்டங்களைச் சந்தித்து வருகின்றன. இது பணியாளர்களின் வருமானத்தைப் பெரிதும் பாதித்துள்ளது.

இந்நிறுவனங்கள் ஒரு காலத்தில் வருடத்திற்கு 30-40 சதவிகித சம்பள உயர்வை தங்கள் பணியாளர்களுக்கு வழங்கின. ஆனால் தற்போது இந்த மந்த நிலையால் இந்த உயர்வு 10-15 சதவிகிதம் எனக் குறைந்துள்ளது.

ஈஎம்ஐ பற்றிய பயம்

ஈஎம்ஐ பற்றிய பயம்

ஒருகாலக் கட்டத்தில் ஐடி பணியாளர்கள் தாங்கள் எதை வாங்கினாலும் இஎம்ஐ எனப்படும் மாதாந்திர தவணை முறையிலேயே வாங்க விரும்பினர். அவை அவர்களுக்குப் பாதுகாப்பாகவும் பொருத்தமானதாகவும் இருந்தது. காரோ அல்லது அபார்ட்மெண்ட் வாங்கவோ அவர்கள் இஎம்ஐ முறையையே நாடினர்.

ஆனால் தற்போது, சம்பளக்குறைவு வேலை ஸ்திரத் தன்மைக் குறைவு ஆகிய காரணங்களால் இஎம்ஐ மூலம் வாங்குவதில் ஆர்வம் குறைந்துள்ளது.. தங்கள் வேலைக் குறித்த அச்சத்தினால் தவணைகளைச் செலுத்த இயலாமல் போய்விடும் என அவர்கள் நினைக்கின்றனர்.

ஐடி துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்

ஐடி துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்

ஒரு காலத்தில் ஐடி துறை இந்தியாவில் வேகமான வளர்ச்சி கொண்ட ஒரு துறையாக இருந்தது. அது ஆறு பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில் இருந்து 110 பில்லியன் டாலர் என்ற அளவிற்கு 2002-2012 ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் வளர்ந்தது.

ஆனால் காலத்திற்கு ஏற்றாற்போல் இந்தத் துறையும் சில மாற்றங்களைக் கண்டது. சாப்ட்வேர் மட்டுமே பெரும்பாலும் முன்னிலை வகித்து வந்த ஐடி துறையில் தற்போது டேட்டா மற்றும் கிளவுட் கம்பியுடிங், மொபிலிட்டி மற்றும் கன்சல்டிங் ஆகியவை முக்கியத்துவம் பெறத் துவங்கியுள்ளன.

ஆய்வு

ஆய்வு

இந்தியாவில் அதிகபட்ச சம்பளம் வாங்குவது தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி) துறை ஊழியர்கள் என கூறியுள்ளது. அத்துறையினருக்கு சராசரியாக மணிக்கு, 346 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.

குறைந்தபட்சமாக, உற்பத்தி துறையில், சராசரியாக, மணிக்கு 254 ரூபாய் வழங்கப்படுகிறது என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

எம்.எஸ்.ஐ எனப்படும், மான்ஸ்டர் ஊதியக்குறியீடு அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் இதுகுறித்து சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

சாப்ட்வேர் துறை

சாப்ட்வேர் துறை

அதிக வருமான பெற சாப்ட்வேர் துறையே விட்டா வேற வேலையே இல்லையா??

 தங்கம் விலை

தங்கம் விலை

சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரத்தை தெரிந்துக்கொள்ள இதை மட்டும் கிளீக் பண்ணுங்க போதும்...

நாணய மதிப்புகள்..

நாணய மதிப்புகள்..

அமெரிக்க டாலருக்கு மற்றும் உலகின் நாடுகளின் நாணயங்களுக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பை சில நொடிகளில் தெரிந்துக்கொள்ளலாம்.

தெரிந்துக்கொள்ள..

IFSC மற்றும் MICR குறியீடு

IFSC மற்றும் MICR குறியீடு

வங்கி பரிமாற்றத்திற்காக தேவைப்படும் IFSC மற்றும் MICR குறியீட்டை இணைய தளத்தில் தேட வேண்டாம்.. நாங்க இருக்கோம்...

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reasons, Why Indian Techies Are Spending Less

Due to ups and downs in the IT market IT professionals have started feeling hurdles on their spending habits.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X