மும்பை: வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தில் காலை வர்த்தகம் துவக்கம் முதலே தொடர் உயர்வைச் சந்தித்த மும்பை பங்குச்சந்தை, வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 564.60 புள்ளிகள் உயர்வுடன் முடிவடைந்துள்ளது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள்
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 564.60 புள்ளிகள் உயர்ந்து 26,785.55 புள்ளிகளையும், நிஃப்டி குறியீடு 168.40 புள்ளிகள் உயர்ந்து 8,119.30 புள்ளிகளையும் எட்டி திங்கட்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.
இன்றைய சந்தை உயர்விற்கு 5 முக்கியக் காரணங்கள் உள்ளது.

ஐரோப்பிய சந்தை
ஐரோப்பிய சந்தை இன்று வர்த்தகம் துவக்கம் முதலே சுரங்கம் மற்றும் எண்ணெய் மீதான வர்த்தகம் அதிகரித்தால், தொடர் உயர்வைச் சந்தித்தது. இதனால் மொத்த ஐரோப்பிய சந்தையும் உயர்வுடன் காணப்பட்டது.
இதனுடன் ஐெர்மணி அதிபர் ஏஞ்சலா மெர்கல் இன்று இந்தியா வந்துள்ளதால் , இந்திய சந்தையில் ஐரோப்பி நிறுவனங்களின் முதலீடு கணிசமாக அதிகரித்தது.
ரூபாய் மதிப்பு
இந்தியா ரூபாய் மதிப்பு கடந்த 5 நாட்களாகத் தொடர்ந்து அதிகரித்த வருகிறது. இன்றைய நாணய சந்தை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு 21 பைசா அதிகரித்து 65.30 ரூபாயாக உள்ளது.
சீனா, ஹாங்காங் சந்தைகள்
ஆசிய சந்தையிலும் இன்று சிறப்பான வர்த்தகத்தைச் சந்தித்துள்ளதால், சீனா, ஹாங்காங் மற்றும் ஜப்பான் சந்தைகளும் இன்று உயர்வுடன் காணப்பட்டது.
ஜாப்ஸ் டேட்டா
அமெரிக்க அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள ஜாப்ஸ் டேட்டாவின் மூலம் வருகிற டிசம்பர் மாதமும் அமெரிக்கப் பெடரல் வங்கி தனது வட்டி விகிதத்தை உயர்த்தாது எனத் தெளிவாகத் தெரிந்துள்ளது.
அன்னிய முதலீடு
அமெரிக்க ஜாப்ஸ் டேட்டா எதிரொலி மற்றும் எப்பிஐ மூலம் இந்திய சந்தையில் அதிகளவிலான முதலீடு குவிந்துள்ளதால் மும்பை பங்குச்சந்தையில் இன்று அதிகளவிலான முதலீடு குவிந்துள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications