மும்பை: இந்திய பங்குச்சந்தையில் இன்று காலை அதிகளவிலான அன்னிய முதலீடு குவிந்ததால் வர்த்தகம் உயர்வுடன் துவங்கியது. இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 147 புள்ளிகள் வரை உயர்வடைந்தது.
மதிய நேரத்தில் வர்த்தகம் சற்று மந்தமடைந்தாலும் செவ்வாய்க்கிழமை வர்த்தகம் உயர்வுடனே முடிவடைந்தது.

இந்திய சோலார் மின் திட்டங்களுக்காக ஜெர்மனி நாட்டின் 1 பில்லியன் டாலர் கடன் மற்றும் இரு நாடுகளுக்கு மத்தியிலான வர்த்தக ஒப்பந்தம் ஆகியவற்றின் காரணமாக மும்பை பங்குச்சந்தையில் இன்று சென்செக்ஸ் குறியீடு 147 புள்ளிகள் உயர்ந்து 26,932.88 புள்ளிகளை எட்டியுள்ளது.

சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் இன்று 33 புள்ளிகள் உயர்வில் 8,125.90 புள்ளிகள் உயர்வுடன் இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் நாணயச் சந்தையில் அதிகளவிலான முதலீடு செய்யப்பட்டது, இதனால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்ந்து காணப்பட்டது.

இதன் படி 24 கேரட் தங்கத்தின் விலை கிராமிற்கு 5 ரூபாய் உயர்ந்து 2,662 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications