பருவமழை குறைந்ததால் 8 லட்சம் கோடி சந்தை கேள்விக்குறி..? வங்கிகளுக்கு முளைத்தது புது பிரச்சனை..

மும்பை: இந்தியாவில் பல முக்கியப் பகுதிகளில் பருவமழை குறைந்துள்ளதால் விவசாயத் துறை மற்றும் அதன் உற்பத்தி அதிகளவில் பாதிப்படைந்துள்ளது.

இந்நிலையில் அரசு மற்றும் தனியார் வங்கிகளின், 8 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான விவசாயத் துறை சந்தைக் கேள்விக்குறியாகியுள்ளது.

விவசாயத்திற்கு முக்கியத் தேவையான மழை இல்லாவிட்டால், இத்துறையின் உற்பத்தி மற்றும் வருவாய் அதிகளவில் குறையும். இதனால் வங்கிகள் விவசாயிகளுக்கு அளித்த கடன் மற்றும் நிதியுதவிகள் அனைத்தும் வராக் கடன் அல்லது தள்ளுபடி கடனாக மாற வாய்ப்புள்ளது.

இதனைத் தடுக்கவே வங்கி நிர்வாகங்கள் பல ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறது.

வானிலை ஆய்வு மையம்..

வானிலை ஆய்வு மையம்..

நீண்ட கால அடிப்படையிலாகவே இந்தியாவில் பருவமழை பற்றாக்குறை 14 சதவீதமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், வங்கி நிர்வாகங்களுக்குப் புதிய பிரச்சனை தலையில் ஏறியுள்ளது.

சில பகுதிகளில் பருவமழை பற்றாக்குறை 20 சதவீதமாகக் கூட இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை மணி அடித்துள்ளது.

 

8 லட்சம் கோடி

8 லட்சம் கோடி

வங்கிகள் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 7,20,400 கோடியாக இருந்து விவசாயச் சந்தை மீதான வர்த்தகம் தற்போதும் 8,02,800 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்த வளர்ச்சி வங்கித்துறைக்குச் சாதகமாக இருந்தாலும், பருவமழை பற்றாக்குறையினால் தற்போது ஆபத்து நிறைந்த சந்தையாக மாறியுள்ளது வங்கி நிர்வாகங்களிடையே கவலை அளித்துள்ளது.

 

சாட்டை அடி..

சாட்டை அடி..

ஏற்கனவே வராக்கடன் உயர்விற்காக வணிக வங்கி நிர்வாகத்தின் மீது சாட்டையைத் திருப்பியுள்ளது ரிசர்வ் வங்கி. ஆர்பிஐ-யிடம் இருந்து தப்ப போராட வேண்டிய நிலையில், வங்கிகள் கூடுதல் சுமையினால் தற்போது தடுமாறியுள்ளது.

வங்கிகளின் திட்டம்...

வங்கிகளின் திட்டம்...

இப்பிரச்சனைகளைத் தீர்க்க வங்கி நிர்வாகங்கள், விவசாயிகளின் கடன் காலத்தை நீட்டிக்கவும், வட்டி விகிதம் அல்லது கட்டணங்களில் சில சலுகையை அறிவித்து வராக் கடனாக மாறும் நிலையை மாற்றத் திட்டமிட்டுள்ளது.

கடன்கள்

கடன்கள்

இந்திய வணிக வங்கிகளில் இருந்து விவசாயிகள் டிராக்டர், கட்டமான உபகரணம் கடன், ஊரக வீட்டுக்கடன் போன்ற பல வகையான கடன்களை விவசாயிகள் வாங்கியுள்ளனர். பருவமழை பற்றாக்குறையினால் இதில் பெரும்பகுதி வராக் கடனாக மாற வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என இந்தியா ரேட்டிங் அண்ட் ரிசர்ச் நிறுவனத்தின் தலைவர் அபிஷேக் பட்டாசாரியா தெரிவித்தார்.

முக்கிய மாநிலங்கள்

முக்கிய மாநிலங்கள்

இந்நிலையில் வங்கிகள் உத்திர பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா பகுதிகளை மிகவும் பாதிக்கப்படும் (ஆபத்து) பகுதிகளாக அறிவித்துள்ளது.

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+