மும்பை: கடந்த 6 நாள் தொடர் உயர்வில் இருந்த மும்பை சந்தை, வியாழக்கிழமை வர்த்தக முடிவில் 220 புள்ளிகள் வரை சரிந்ததுள்ளது.
இன்று காலை வர்த்தகத் துவங்கும் முதலே முதலீட்டாளர்கள் அதிக லாப நோக்கத்துடன் பங்குகளை விற்கத் துவங்கியதால் சரிவுடன் துவங்கிய சென்செக்ஸ் குறியீடு, வர்த்தக முடிவில் 190.04 புள்ளிகள் சரிந்து 26,845.81 புள்ளிகளை எட்டியது.

அதேபோல் நிஃப்டி குறியீடு 48.05 புள்ளிகள் சரிவுடன் 8,129.35 புள்ளிகளை எட்டியது.
வியாழக்கிழமை மாலை நேர வர்த்தகத்தில் எப்எம்சிஜி, வங்கியியல், கேபிட்டல் கூட்ஸ் மற்றும் சுகதாரத்துறை சார்ந்து நிறுவனங்களின் பங்குகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டதால் சென்செக்ஸ் 200 புள்ளிகள் வரை சரிந்துள்ளது.

இதேபோல் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று சரிந்ததால் அன்னிய முதலீட்டாளர்களின் முதலீட்டு அளவு இன்று குறைந்தது.
ஆசிய சந்தையில் நிலவிய மந்தமான பொருளாதாரச் சூழ்நிலையின் காரணமாக ஜப்பான் மற்றும் ஹாங்காங் சந்தைகள் சரிவடைந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications