டெல்லி: இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரியை அமலாக்கம் செய்வதற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கான மாதிரி சரக்கு மற்றும் சேவை வரித் திட்டத்தை ( CGST, SGST) வடிவமைத்துள்ளது.
இதனுடன் மத்திய அரசு வடிவமைக்கப்பட்ட ஒருங்கிணைப்பு ஜிஎஸ்டி திட்டத்தை (iGST) நவம்பர் மாத துவக்கத்தில் அமலாக்கம் செய்ய நிதியைச்சகம் முடிவு செய்துள்ளது.
ஆலோசனை கூட்டம்..
தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள CGST, SGST மற்றும் iGST திட்டங்கள் குறித்து மாநில அரசுகளின் நிதியமைச்சர்கள், மத்திய அரசு அதிகாரிகளுடன் கூடிய விரைவில் ஆலோசனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒருங்கிணைக்கப்பட்ட ஜிஎஸ்டி
மத்திய அரசின் தற்போதைய அறிவிப்பின் படி, iGST திட்டத்தை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அமலாக்கம் செய்யப்பட்டு அதனை மாநிலங்களின் சட்டத்திட்டத்திற்கு ஏற்றப்படி மாற்றி அமைத்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக முடிவுகளை மாநில அரசின் நிதியமைச்சர்கள் உடன் நடத்தப்படும் கூட்டத்தில் எடுக்கப்படும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
CGST, SGST திட்டங்கள்
CGST திட்டம் மத்திய அரசின் ஜிஎஸ்டி திட்டத்தின் படி வடிவமைக்கப்பட்டுள்ளது, SGST என்பது மாநில அரசின் சலுகை மற்றும் விதிகளுக்கு உட்பட்டு சில மாற்றங்களுடன் அமலாக்கம் செய்யப்பட உள்ளது.
ஏப்ரல் 1
இத்திட்டத்தை இந்தியாவில் வருகிற ஏப்ரல் 1 2016ஆம் ஆண்டு முதல் முழுமையாகச் செயல்படுத்த மத்திய நிதியைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்காக இன்போசிஸ் நிறுவனத்தைத் தொழில்நுட்ப உதவிக்கரமாக நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications