மும்பை: கடந்த 3 நாட்களாக மும்பை பங்குச்சந்தை மந்தமான வர்த்தகத்தைப் பெற்று வந்த நிலையில், வியாழக்கிழமை வர்த்தகம் மிகவும் சிறப்பாக அமைந்தது.
அமெரிக்கப் பெடரல் வங்கி தனது வட்டி உயர்வு நடவடிக்கையை ஜனவரிமாதம் வரை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதால், ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகள் இன்று அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றது. இது இந்திய சந்தைக்கு மிகவும் சாதகமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்திய சந்தை எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ், மைண்ட்டீர், மாஸ்டெக் மற்றும் சின்டெக்ஸ் போன்ற நாட்டின் முன்னணி நிறுவனங்களின் 2வது காலாண்டு முடிவுகள் சிறப்பாக இருந்தது.
இதன் காரணமாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 230.48 புள்ளிகள் வரை உயர்ந்து 27,010.14 புள்ளிகள் வரை உயர்ந்தது.
அதேபோல் நிஃப்டி குறியீடும் 71.60 புள்ளிகள் உயர்வில் 8,179.50 புள்ளிகள் வரை உயர்ந்தது.


Click it and Unblock the Notifications