மும்பை: திங்கட்கிழமை வர்த்தகத்தில் டாலர் மதிப்பு உயர்வாலும், அமெரிக்க ஹவுசிங் டேட்டா அறிக்கை அந்நாட்டுப் பொருளாதாரத்திற்குச் சாதகமாக அமைந்துள்ளது. இதனால் பெடரல் வங்கி இவ்வருட இறுதிக்குள் தனது வட்டி விகிதத்தைக் குறைக்கும் எனச் செய்திகள் வெளியாகி உள்ளது.
இதனால் அமெரிக்க டாலர் மதிப்பு கடந்த 3 நாட்களாகத் தொடர்ந்து அதிகரித்துக் காணப்படுகிறது. மேலும் தங்கம் மற்றும் வெள்ளி மீதான முதலீடு அதிகளவில் குறைந்ததுக் காணப்படுகிறது.
நியூயார்க் சந்தை
நியூயார்க் மெர்கன்டைல் சந்தையில், தங்கம் விலை சுமார் 0.9 சதவீதம் அதாவது 10.30 டாலர் குறைந்து ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,172.80 டாலராக விற்கப்படுகிறது.
பெடரல் வங்கி
கடந்த வாரம் பெடரல் வங்கி தனது வட்டி விகித உயர்வை 2016ஆம் ஆண்டு வரை ஒத்திவைப்பதாக அறிவித்த நிலையில் தங்கம் விலை வியாழக்கிழமை 1,187.50 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
தற்போது அந்நாட்டு ஹவுசிங் டேட்டா அமெரிக்கப் பொருளாதாரத்திற்குச் சாதகமாக அமைந்துள்ளதால், டிசம்பர் மாத்திற்குள் பெடரல் வங்கி தனது வட்டி விகிதத்தைக் குறைக்க வாய்ப்புள்ளது.
வர்த்தகம் உயர்வு.. விலை சரிவு..
இதன் தாக்கம் இந்தியா மற்றும் ஆசிய சந்தையில் அதிகளவில் தெரிகிறது. இந்திய நாணய சந்தையில் கடந்த 3 நாட்களாகத் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை வர்த்தகம் துவங்கும் முதலே தங்கம் மீதான வர்த்தகம் அதிகரித்தது காணப்பட்டாலும் விலை நிலை சரிந்தது.
முதலீடு அதிகரிப்பு
இந்தியாவில் தற்போது விழாக்காலம் துவங்கியுள்ளதால், தங்கம் மற்றும் வெள்ளி மீதான முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாகத் திங்கட்கிழமை வர்த்தகத்தில் தங்கம் விலை கணிசமாக உயர்ந்தது.
தங்கம் விலை
ஆனால் செவ்வாய்க்கிழமை வர்த்தகத் துவக்கத்தில் 24 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 5 ரூபாய் குறைந்து 2,707.5 ரூபாயாகவும், 22 கேரட் 1 கிராம் தங்கம் 5 ரூபாய் குறைந்து 2,531.69 ரூபாயாக வர்த்தகம் செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும், சுமார் 276 ரூபாய் குறைந்து 1 கிலோ பார் வெள்ளியின் விலை 37,145 ரூபாயாக விற்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!



Click it and Unblock the Notifications