மும்பை: எப் அண்ட் ஓ சந்தையில் அக்டோபர் மாதத்திற்கான ஆர்டர்கள் இன்று முடிவடைந்ததால், மும்பை பங்குச்சந்தையில் இன்று அதிகளவிலான முதலீடு வெளியேறியது. இதனால் மும்பை பங்குச் சந்தை இன்று தொடர் நான்காவது நாளாகச் சரிவை தழுவியது.
அதுமட்டும் அல்லாமல் அமெரிக்கப் பெடரல் வங்கியின் வட்டி உயர்வு நடவடிக்கை டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டதால், அமெரிக்காவில் இருந்து இன்று குறைவான முதலீட்டை மட்டுமே பெற்றது.

இதன் காரணங்களாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு வியாழக்கிழமை வர்த்தக முடிவில் சுமார் 201.62 புள்ளிகள் குறைந்து 26,838.14 புள்ளிகளை எட்டியது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் இன்று 59.45 புள்ளிகள் குறைந்து 8,111.75 புள்ளிகளை எட்டியது.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் டாப் 50 நிறுவனங்களில் டாக்டர் ரெட்டி, டாடா மோட்டார்ஸ், லூப்பின், ரிலையன்ஸ், பஜாஜ் ஆட்டோ, ஹீரோமோட்டோகார்ப், டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள் குறைந்த அளவிலான லாபத்தை மட்டுமே சந்தித்த நிலையில் பிற நிறுவனங்கள் சரிவை சந்தித்தது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications