மும்பை: வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று மும்பை பங்குச் சந்தையில் ஐடிசி மற்றும் லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள், சந்தைக் கணிப்புகளை எட்டாத நிலையில், முதலீட்டாளர்கள் மத்தியில் கார்பரேட் நிறுவனங்கள் மீதான கண்ணோட்டம் மாறியது.
இதனால் காலை வர்த்தகத்தில் உயர்வில் இருந்து மும்பை பங்குச்சந்தை மதிய நேரத்தில் மளமளவெனச் சரிய துவங்கியது.

மேலும் அமெரிக்கப் பெடரல் வங்கியின் நேற்றைய அறிவிப்பினால் இந்திய சந்தையில் அமெரிக்க முதலீட்டாளர்களின் முதலீடு கணிசமாகக் குறைந்துள்ளது.
அதுமட்டும் அல்லாமல் விழாக்காலம் என்பதால், சில்லறை முதலீட்டாளர்களின் முதலீடு கடந்த ஒரு வாரமாகத் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 181.31 புள்ளிகள் குறைந்து 26,656.83 புள்ளிகளை அடைந்தது, அதேபோல் நிஃப்டி குறியீடு 45.95 புள்ளிகள் சரிந்து 8,065.80 புள்ளிகளை எட்டியது.


Click it and Unblock the Notifications