மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய மது விற்பனை நிறுவனமான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் 2015ஆம் நிதியாண்டில் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் எந்த ஒரு இந்திய நிறுவனமும் பெற்றிடாத அளவிற்கு 9.3 பில்லியன் டாலர் லாபத்தைப் பெற்றுள்ளது.
யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் அதிகளவிலான பங்குகளில் பிரட்டன் டியாஜியோ முதலீடு செய்துள்ளதால், யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிர்வாகப் பொறுப்பு முழுவதும் டியாஜியோ கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
9.3 பில்லியன் டாலர் லாபமா??
டியாஜியோ தலைமையிலான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம், நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் இந்நிறுவனத்தின் 8.5 மில்லியன் பங்குகளை யுனைடெட் புரூவரீஸ் நிறுவனத்திற்கு 8.7 பில்லியன் டாலர் தொகைக்கு விற்பனை செய்ததால், இந்நிறுவனத்தின் லாப அளவு உச்சத்தைத் தொட்டுள்ளது.
விஜய் மல்லையா
யுனைடெட் புரூவரீஸ் மற்றும் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு 2012ஆம் ஆண்டுக்கு முன் விஜய் மல்லையா தலைமையில் இயங்கியது.
பங்கு விற்பனை
இந்தப் பங்கு விற்பனையின் மூலம் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் காலாண்டு லாப அளவுகள் சுமார் 9.3 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இக்காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் விற்பனை அளவுகள் 5.7 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால் மொத்த வருவாய் அளவும் 21.22 பில்லியன் டாலர் அளவில் உயர்ந்துள்ளது.
கடன் அளவு
இந்நிறுவனத்தின் பங்கு விற்பனையின் மூலம் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் மொத்த கடன் அளவு 53.23 பில்லியன் டாலரில் இருந்து 39.99 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.
மது வகைகள்
மேலும் இந்நிறுவனத்தின் மது வகைகள் எண்ணிக்கையை 150ஆக உயர்த்தவும், உயர் ரக மதுபானங்களின் விற்பனையை அதிகரிக்கவும் திட்டமிட்டு வருவதாக இந்நிறுவனத்தின் சீஇஓ ஆனந்த கரிபாலு தெரிவித்தார்.
39 சதவீத சந்தை
இந்திய மதுபான விற்பனை சந்தையில் சுமார் 39 சதவீதத்தை யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்திடம் உள்ளது. மேலும் உலகளவிலான டியாஜியோ நிறுவன சந்தையில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications