பெங்களூரு: டியாஜியோ நிறுவனம் கட்டுப்பாட்டில் இருக்கும் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் நிறுவனம், யுனைடெட் ப்ரூவரிஸ் நிறுவனத்தில் இருக்கும் தனது 3.21 சதவீத பங்குகள் 872 கோடி ரூபாய்க்கு Heineken நிறுவனத்திற்கு விற்றுள்ளது.
இதனால் கிங்பிஷர் பிரான்டு மதுமானங்களைத் தயாரிக்கும் யுனைடெட் ப்ரூவரிஸ் நிறுவனத்தை விஜய் மல்லையா சரிவர இயக்க முடியாத நிலையும், தனது கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரே நிறுவனத்தையும் இலக்கும் சூழ்நிலை அமைந்துள்ளது.
ஹெயினேகென் இண்டர்நேஷ்னல்
மும்பை பங்குச் சந்தைக்கு யூனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், இந்நிறுவனத்தின் 3.21 சதவீத பங்குகளைச் சந்தை மதிப்பின் படி ஒரு பங்கு 1,030 ரூபாய்க்கு ஹெயினேகென் இண்டர்நேஷ்னல் நிறுவனத்திற்கு விற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
டியாஜியோ நிறுவனம்
சில வாரங்களுக்கு முன்பு டியாஜியோ நிறுவனம் என்எஸ்சி சந்தையில் யுனைடெட் ப்ரூவரிஸ் நிறுவனத்தின் 85 லட்சம் பங்குகளை (3.21 சதவீத பங்கு இருப்பு) விற்பதாக அறிவித்திருந்தது. இதனை ஹெயினேகென் இண்டர்நேஷ்னல் பிவி நிறுவனம் தற்போது கைப்பற்றியுள்ளதாக டியாஜியோ தெரிவித்துள்ளது.
ரூ.872 கோடி
இப்பங்கு விற்பனையின் மொத்த மதிப்பு 872 கோடி ரூபாய் எனப் பங்குச்சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் டியாஜியோ நிர்வகிக்கும் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் தெரிவித்துள்ளது.
55 சதவீத பங்குகள்
கடந்த 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் 55 சதவீத பங்குகளை யுபி குரூப் நிறுவனத்திடம் இருந்து டியாஜியோ 3 பில்லியன் டாலருக்கு (11,000 கோடி ரூபாய்) கைப்பற்றியது.


Click it and Unblock the Notifications