வெள்ளி விலையானது 5 லட்சம் ரூபாய் என்ற மெகா இலக்கை தொடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது தரை இறங்க தொடங்கியிருப்பது முதலீட்டாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அதுவும் ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு சரிவது ஏன் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே வெள்ளி விலை கிலோவுக்கு 5 லட்சத்தை எட்டும் என்ற யூகமானது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தது. கமாடிட்டி நிபுணர்களும் தொடர்ந்து வெள்ளி விலையானது அதிகரிக்கலாம் என்று கூறி வந்தனர். ஆனால் தற்போதைய சந்தை நிலவரம் முற்றிலும் வேறொரு திசையில் பயணித்து கொண்டிருக்கிறது. உச்சத்தில் இருந்த வெள்ளி விலை, இப்போது சரிவை சந்தித்து கொண்டுள்ளது. வானத்தைத் தொடும் என எதிர்பார்க்கப்பட்ட வெள்ளியின் விலை, இப்போது தரையிறங்க தொடங்கியிருப்பது முதலீட்டாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே வெள்ளி விலை கிலோவுக்கு 5 லட்சத்தை எட்டும் என சமூக வலைதளங்களில் பரவி வந்த யூகங்கள் மத்தியில், சில கமாடிட்டி நிபுணர்களும் விலை தொடர்ந்து உயர வாய்ப்புள்ளதாக கூறி வந்தனர். ஆனால் தற்போதைய சூழலில் வெள்ளியானது அப்படியே தலைகீழாக மாறியுள்ளது. உச்சத்தில் இருந்த வெள்ளி விலை, இப்போது சரிவை சந்தித்து வருகிறது.
ஏற்கனவே உச்சத்தில் இருந்து 47% சரிவை சந்தித்துள்ள நிலையில், தற்போது முக்கியமானதொரு கட்டத்தை அடைந்துள்ளது. டெக்னிக்கலாக பார்க்கும்போது ஆர்.எஸ்.ஐ மற்றும் பிபோனாச்சி லெவல்கள் தற்போது வெள்ளிக்கு எதிராக காணப்படுகிறது. இதன் காரணமாக வெள்ளியின் அடுத்த இலக்கு 50 டாலர் அல்லது 1,5 லட்சம் ரூபாயாக இருக்கும் என கூறியுள்ளனர். வெள்ளி விலையானது காமெக்ஸ் சந்தையில் அதன் வரலாற்று உச்ச விலையான 121 டாலரில் இருந்து கிட்டத்தட்ட 47% சரிவைக் கண்டு, 64 டாலராக காணப்படுகிறது. இதே எம்சிஎக்ஸ் சந்தையில் கிலோவுக்கு 4,20,000 ரூபாயில் இருந்து 2,34,000 ரூபாயாக சரிவை கண்டுள்ளது. இதுவும் சுமார் 44% சரிவாகும்.
ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!
தற்போது ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் மத்தியில், தங்கமானது பாதுகாப்பு புகலிடமாக ஜொலிக்க தொடங்கியுள்ளது. ஆனால் வெள்ளி தற்போதைக்கு அதன் ஏற்றத்தை குறைத்துள்ளது. அதன் அடுத்த ஸ்டாப் 50 டாலராக இருக்கும்.
கடந்த கால வரலாற்றை பார்க்கும்போது கடந்த 1980 ல் வெள்ளி விலை மிகப்பெரிய உச்சத்தை எட்டியது. ஆனால் அந்த உச்சத்தில் இருந்து யாரும் எதிர்பாராத விதமாக அதன் விலையில் 72% சரிவை கண்டது. அதன் காரணமாக உச்சத்தில் வாங்கிய முதலீட்டாளர்கள் பெரிய அளவில் நஷ்டத்தை கண்டனர். அதே வரலாற்றுடன் தற்போதைய சூழலை ஒப்பிடும்போது, அதே 72% சரிவை காணலாம் என கணக்கிட்டால், வெள்ளி விலை 35 டாலர் வரை அதல பாதாளத்திற்கு செல்ல வாய்ப்புண்டு. ஆக தற்போது இந்திய சந்தையில் 5 லட்சம் என்ற இலக்கை எட்ட சாத்தியமில்லை. 35 டாலர் என்பது அவ்வளவு சீக்கிரம் எட்டி விடும் என கூற முடியாது. ஆனால் வெள்ளி விலை இறக்க தொடங்கினால், அது முரட்டுத்தனமாக இருக்கும்.
பங்குச் சந்தை ரிஸ்க் பயமா? லாபத்திற்கு கியாரண்டி தரும் Bonds - முதலீடு செய்வது எப்படி?
மாத சார்ட் பேட்டர்னில் பார்க்கும்போது ஆர்.எஸ்.ஐ 121 டாலர் என்ற உச்சத்தை எட்டிய பிறகு, சற்று கீழாக நகரத் தொடங்கியுள்ளது. இது வெள்ளியானது உச்சத்தில் இருந்து சற்று பலவீனமாக இருப்பதை காட்டுகிறது. ஒரு கார் மலை உச்சத்திற்கு திக்கி திணறி ஏற்றம் கண்டு, அங்கிருந்து கீழாக சரிந்தால் எப்படி இருக்குமோ, அதே நிலையில் தான் வெள்ளியும் இருக்கிறது. இதுவரை காளையின் பிடியில் சிக்கியிருந்த வெள்ளி விலையானது, தற்போது கரடிகளின் ஆதிக்கத்திற்கு மாறத் தொடங்கியுள்ளதை இது உறுதிப்படுத்துகிறது. பொதுவாக மாதாந்திர சார்ட்டில் ஏற்படும் மாற்றங்கள் சில வாரங்களில் சரியாகிவிடாது. இது பல மாதங்கள் அல்லது வருடங்கள் நீடிக்கக்கூடிய ஒரு மந்தநிலையின் ஆரம்பமாக இருக்கலாம்.
UAN இல்லாமலே பிஎஃப் பேலன்ஸ் பார்க்கலாம்! இதோ அந்த சீக்ரெட் ட்ரிக்!
ஆர்எஸ்ஐ குறைவது என்பது வாங்குபவர்களின் பலம் குறைந்து, விற்பவர்கள் கை ஓங்குவதை காட்டுகிறது. சர்வதேச சந்தையில் டாலர் மதிப்பு வலுவடைந்ததால், தங்கம் மற்றும் வெள்ளி போன்ற உலோகங்களின் மீதான முதலீடு குறைந்து வருகிறது. மேற்கொண்டு வெள்ளியின் தொழில்துறை தேவை, சோலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் பயன்பாடு சற்று குறைந்திருப்பதும் ஒரு முக்கிய காரணமாகவும் பார்க்கப்படுகிறது.
ஆக முந்தைய கற்பனை செய்யப்பட்ட 5 லட்சத்தை விட, யதார்த்தமான 1.5 லட்சம் என்பதே இப்போதைக்கு வெள்ளியின் நிலையான இலக்காக இருக்கும் என கூறப்படுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

உகாதி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! தொடர்ந்து 7ஆவது நாளாக நடக்கும் மேஜிக்..!!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

தங்கம், வெள்ளி விலை : வரும் நாட்களிலும் விலை சரியுமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?



Click it and Unblock the Notifications