டெல்லி: இந்தியாவில் தங்க இறக்குமதியைக் குறைக்கும் கோல்டு மானிடைசிங் திட்டம், சவரன் கோல்டு பாண்டு திட்டம், தங்க நாணயம் மற்றும் புல்லியன் திட்டம் ஆகிய 4 திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை வெளியிட்டார்.
நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை அதிகளவில் பாதிக்கும் தங்க இறக்குமதியைக் குறைக்கும் வண்ணமாக முதலீட்டாளர்களுக்கு நேரடி தங்க முதலீட்டாக்கான லாபத்தை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட திட்டங்கள் வியாழக்கிழமை முதல் சந்தையில் நடைமுறைக்கு வந்துள்ளது.
பிரதமர் மோடி
இந்தியாவில் சுமார் 20,000 டன் தங்கம் உள்ள நிலையில் எப்படி ஏழை நாடு என்றும் கூறுவது. நாட்டில் உபயோகம் இல்லாமல் இருக்கும் தங்கத்தின் மீது செய்யப்படும் வர்த்தகத்தின் மூலம் நாட்டின் நடப்பு கணக்குப் பற்றாக்குறை மற்றும் நாட்டின் நிதிநிலையை மேம்படுத்தவே இத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது எனத் திட்ட வெளியீடு விழாவில் நரேந்திர மோடி பேசினார்.
பெண்களுக்கானது தங்கம்
இந்திய சமுகத்தில் இன்றைய நாள் வரை தங்கம் பெண்களுக்கானது என்று அறிப்பட்டாலும், இப்புதிய திட்டங்கள் மூலம் இந்நிலை முழுமையாக மாறும் என்பது உறுதி.
ஜிஎம்எஸ்
ஜிஎம்எஸ் என்றும் அழைக்கப்படும் கோல்டு மானிடைசிங் திட்டம் மத்திய அரசால் 1999ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட கோல்டு டெப்பாசிட் திட்டத்தை மாற்றி அமைக்க உள்ளது. இத்திட்டத்தில் முதலீடு செய்துள்ளவர்கள் முதிர்வு காலம் முடியும் வரை அல்லது திரும்ப எடுத்துக்கொள்ளும் வரை பழைய திட்ட வரையறைக்குள் இயங்கும்.
பத்திர முதலீடுகள்
தற்போது அரசு வெளியிட்டுள்ள பத்திரங்களில் 8 வருடங்கள் முதிர்வு காலக் கொண்டவையாகும். குறைந்தது ஒரு தனிநபர் 2 கிராம் அதிகபட்சம் 500 கிராம் வரை மட்டுமே முதலீடு செய்ய முடியும்.
தங்க நாணயம் மற்றும் புல்லியன் திட்டங்கள்
இத்திட்டங்கள் கீழ் அரசு முதலீட்டுத் தொகைக்கு ஏற்றத் தங்க நாணயங்களை அளிக்கிறது. தறிபோது 5கிராம் (15,000 நாணயங்கள்), 10 கிராம் (20,000 நாணயங்கள்) தங்க நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளது, கூடிய விரைவில் 3,750 20 கிராம் பார் தங்கமும் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளது.
தங்க இறக்குமதி
2014-15ஆம் நிதியாண்டில் இந்தியாவில் 2.1 லட்சம் கோடி மதிப்பாலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஏப்ரல் -செப்டம்பர் காலத்தில் மட்டும் சுமார் 1.12 லட்சம் கோடி மதிப்பிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

தங்கம் விலை மதுரை: இன்று அதிரடி உயர்வு! நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்த சர்வதேச காரணங்கள்..!

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

இன்று தங்கம், வெள்ளி விலை என்ன ஆனது? இனி வரும் நாட்களில் விலை ஏறுமா இறங்குமா?

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று அதிரடி சரிவு! மார்ச் 6 நிலவரம், முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications