கணிப்புகளை உடைத்து 25% லாபத்தை பதிவு செய்தது எஸ்பிஐ..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நாட்டின் மிகப்பெரிய வங்கி அமைப்பான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா செப்டம்பர் மாதம் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த 2வது காலாண்டில் இதர வருமானம் மற்றும் குறைந்த செலவினங்கள் மூலம் சுமார் 25 சதவீத லாப உயர்வைப் பதிவு செய்துள்ளது.

 

சந்தைக் கணிப்புகளின் இவ்வங்கியின் லாப உயர்வு 21 சதவீதத்திற்கும் குறைவாக இந்த நிலையில் எஸ்பிஐ வங்கி 25 சதவீத லாப உயர்வைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மொத்த லாப அளவுகள்

மொத்த லாப அளவுகள்

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 2015ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டில் 25 சதவீத லாப உயர்வுடன் 3,879.07 கோடி ரூபாய் பெற்றுள்ளது. கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இதன் அளவு 3,100.41 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வருவாய்

வருவாய்

மேலும் 2வது காலாண்டில் இவ்வங்கியின் மொத்த வருவாய் அளவுகள் ரூ.41,833.36 கோடியில் இருந்து 46,854.81 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

வராக் கடன் அளவுகள்

வராக் கடன் அளவுகள்

இவ்வங்கியின் தொடர் கட்டுப்பாட்டு நடவடிக்கையின் காரணமாக வராக் கடன் அளவுகள் 4.29 சதவீதத்தில் இருந்து 4.15 சதவீதமாகக் குறைந்துள்ளது.

மேலும் கடந்த 3 காலாண்டுகளாக எஸ்பிஐ வங்கியின் வராக் கடன் அளவுகள் தொடர்ந்து சரிந்த வண்ணமாக உள்ளது.

சந்தைக் கணிப்புகள்
 

சந்தைக் கணிப்புகள்

சந்தைக் கணிப்புகளுக்கு அதிகமான லாப அளவுகளைப் பதிவு செய்த நிலையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் சுமார் 4.08 சதவீத உயர்வைப் பதிவு செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI beats forecasts with 25% rise in profit

Country's largest lender SBI July-September quarter earnings beat analysts' expectations on Friday. Standalone profit shot up 25.1 percent to Rs 3,879 crore from Rs 3,100.4 crore year-on-year, driven by other income and operating profit.
Story first published: Friday, November 6, 2015, 14:11 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X