மும்பை: வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை 600 புள்ளிகள் சரிவுடன் துவங்கியது. இதனால் இன்றைய வர்த்தகம் முழுவதும் மந்தமானதாகவே காணப்பட்டது.
நடந்து முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் மோடி தலைமையிலான பிஜேபி அரசு எதிர்பாராத விதிமாகத் தோல்வியைச் சந்தித்தால், நாடாளுமன்றத்தில் புதிய திட்டங்களை அமல்படுத்துவதில் தடைகள் உருவாகியுள்ளது. இதன் காரணமாகவே மும்பை பங்குச்சந்தையில் இன்று அதிகளவிலான சரிவை சந்தித்தது.

இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 26,000 புள்ளிகளை விடவும் குறைவான அளவைப் பதிவு செய்துள்ளது.
அதேபோல் நிஃப்டியும் 7,800 புள்ளிகளை விடக் குறைவான அளவுகளைப் பதிவு செய்து முதலீட்டாளர்கள் வயிற்றில் புளியை கரைத்தது.

ஆனால் வர்த்தக முடிவில் இரு சந்தைகளும் குறிப்பிடதக்கத அளவிலான உயர்வைச் சந்தித்தது.
திங்கட்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 143.84 புள்ளிகள் சரிவில் 26,121.40 புள்ளிகளை எட்டியது, அதேபோல் நிஃப்டியும் 39.10 புள்ளிகள் குறைந்து 7,915.20 புள்ளிகள் வரை குறைந்தது.


Click it and Unblock the Notifications