மும்பை: உலக நாடுகளின் மந்தமான பொருளாதாரம் மற்றும் டாலர் மதிப்பின் பாதிப்பு ஆகியவற்றின் காரணமாக வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை சுமார் 256 புள்ளிகள் வரை சரிந்தது.
வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று விழாக்கால விடுமுறைகள் முடிந்து வர்த்தகம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சர்வதேச சந்தையில் நிலவிய மந்தமான பொருளாதாரச் சூழ்நிலைகளால் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று 256 புள்ளிகள் வரை சரிந்து 25,610.53 புள்ளிகளை எட்டியது.

அதேபோல் வர்த்தகம் துவங்கிய முதல் சரிவை தழுவிய நிஃப்டி குறியீடு, வர்த்தக முடிவில் 62.75 புள்ளிகள் குறைந்து 7,762.25 புள்ளிகள் வரை சரிந்துள்ளது.
பங்குச்சந்தையைப் போலவே நாணய சந்தையிலும் முதலீட்டு அளவுகள் அதிகளவில் குறைந்தது. இதனால் இந்திய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையும் அதிகளவில் குறைந்தது.

இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் மெட்டல் மற்றும் நுகர்வோர் பொருட்கள் சந்தைக் குறைந்த அளவில் உயர்வைச் சந்தித்தாலும். கேபிடல் மற்றும் ஆட்டோமொபைல் சந்தைகள் 1.50 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை சந்தித்தது.
மேலும் வெள்ளிக்கிழை கோல் இந்தியா, பஞ்சாப் நேஷ்னல் வங்கி, கோட்டாக் மஹிந்திரா வங்கி, பிபிசிஎல், பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் 1.15 சதவீதம் முதல் 2.90 சதவீதம் வரை உயர்ந்தது.


Click it and Unblock the Notifications