மும்பை: வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை சரிவுடன் துவங்கினாலும், மத்திய அரசு வெளியிட்ட மொத்த விலை பணவீக்கத்தின் வலுவான நிலையின் காரணமாகச் சென்செக்ஸ் குறியீடு 150 புள்ளிகள் உயர்வுடன் முடிவடைந்தது.

மேலும் ப்ளூ சிப் பங்கு முதலீட்டின் மீதான நஷ்டத்தின் காரணமாக முதலீட்டாளர்கள் கடந்த வாரம் அதிகளவில் தங்களது முதலீட்டை இந்திய சந்தையில் இருந்து குறைத்துக்கொண்டனர். தற்போது இதன் நிலை முழுமையாக மாறியது. இதனால் காலை 11 மணி வரையில் மந்தமாகச் சென்செக்ஸ் குறியீடு வர்த்தக முடிவில் உயர்வடைந்தது.
நாட்டின் மொத்த பொருளாதார வளர்ச்சி 2015ஆம் ஆண்டில் 7.3 சதவீதத்தைத் தாண்டும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அவர்களின் அறிவிப்பு இன்றைய வர்த்தக நிலையை முழுமையாக மாற்றியமைத்தது.

இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 149.57 புள்ளிகள் வரை உயர்ந்த 25,760.10 புள்ளிகளை அடைந்து. அதேபோல் நிஃப்டி குறியீடு 44.35 புள்ளிகள் உயர்வில் 7,806.60 புள்ளிகளை அடைந்துள்ளது.
திங்கட்கிழமை வர்த்தகத்தில் கெயில், டாடா ஸ்டீல், டாக்டர் ரெட்டி, எஸ்பிஐ, ஐடிசி, மஹிந்திரா, போன்ற நிறுவனங்கள் அதிகளவிலான லாபத்தைப் பெற்றது. அதேபோல் சன் பார்மா, ஹீரோமோட்டோ கார்ப், ஆக்ஸிஸ் பாங்க், டாடா மோட்டார்ஸ், டிசிஎஸ், இன்போசிஸ், கோல் இந்தியா நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தது.


Click it and Unblock the Notifications