பாரீஸ் தீவிரவாத தாக்குதல்: பங்குச்சந்தை முதலீடு சரிவு.. தங்கம் விலை உயர்வு..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: ஏற்கனவே கிரீஸ் நாட்டின் பொருளாதாரச் சரிவால் ஐரோப்பிய சந்தை தவித்து வரும் நிலையில், பாரீஸ் நகரத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல்களால் சர்வதேச பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் தங்களத முதலீட்டைப் பாதுகாத்துக்கொள்ள நாணயச் சந்தையில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர்.

இதனால் திங்கட்கிழமை வர்த்தகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையின் விலை அதிகளவில் உயர்ந்தது.

தங்கம் விலை..

தங்கம் விலை..

அமெரிக்கப் பெடரல் வங்கியின் வட்டி உயர்விற்கான சாத்தியக்கூறுகள் அதிகளவில் உள்ளதால், கடந்த வாரம் சர்வதேச சந்தையில் தங்கம் விலை 6 வருடச் சரிவை சந்தித்தது.

ஆனால் இன்றைய வர்த்தகத்தில் இந்த நிலை மாறுபட்டுக் காணப்படுகிறது.

 

 

இன்றைய வர்த்தகம்

இன்றைய வர்த்தகம்

செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரிவடைந்தாலும், இந்திய சந்தையில் கணிசமான உயர்வுடனே காணப்படுகிறது.

இத்தகைய சூழ்நிலைகளால் சர்வதேச சந்தையில் தங்கம் மீண்டும் மதிப்புதக்க அல்லது லாபகரமான முதலீடாக மாறியுள்ளது.

 

பெடரல் வங்கி

பெடரல் வங்கி

மேலும் அமெரிக்கச் சந்தையில் பணவீக்கம் அதிகரிக்கப் பல அந்நாட்டு அரசு பல செயல்முறைகளைக் கையாண்டாலும் போதிய அளவிலான உயர்வு அடைவில்லை. இதனால் சந்தையில் இரு வேறுபட்ட கருத்துக்கள் நிலவி வருகிறது.

சிலர் பெடரல் வங்கி டிசம்பர் மாதத்தில் நடக்க உள்ள கூட்டத்தில் கண்டிப்பாகத் தனது வட்டி விகிதத்தை உயர்த்தும் எனத் தெரிவித்து வருகின்றனர். மற்றொரு தரப்பினர் பணவீக்கத்தின் அளவுகள் மிகவும் குறைவாகவே உள்ளதால், வட்டியை உயர்த்தினால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தமடையும் எனத் தெரிவித்து வருகின்றனர்.

 

 

நியூயார்க் சந்தை

நியூயார்க் சந்தை

ஐரோப்பிய சந்தை மற்றும் பாரீஸ் தாக்குதல் காரணமாக வெள்ளிக்கிழமை நியூயார்க் நாணயச்சந்தை வர்த்தகத்தில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,091 டாலராக உயர்ந்தது.

அதேபோல் ஆசிய சந்தையில் இதன் அளவு 1,098 டாலராக அதிகரித்தது.

 

சென்னையில் தங்கம் விலை..

சென்னையில் தங்கம் விலை..

செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தையில் அன்னிய முதலீட்டாளர்களின் திடீர் முதலீடுகளால் சென்செக்ஸ் 144 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது. இதனால் தங்கம் விலை கணிசமான சரிவைச் சந்தித்துள்ளது.

சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரத்தைத் தெரிந்துகொள்ள இதைக் கிளிக் செய்யவும்.

 

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold up after Paris attacks

The gold price rose in afternoon trading in the US on Friday – and again in Asia overnight – as investors rushed to safe havens in the wake of the Paris terror attacks.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X